தொடங்கிய குதிரை பேரம்? என்டிஏவுக்கு ஓடும் உத்தவ் தாக்கரேவின் 2 எம்பிக்கள்? பரபரப்பான தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: லோக்சபா தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி எம்பிக்களின் ஆதரவில் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. நாளை பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கிறார். இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இருந்து 2 எம்பிக்கள் பாஜக கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் தொடர்பில் உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து கடந்த 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாஜக 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் 52 இடங்களில் வென்றுள்ளன.

shiva sena uddhav thackeray india nda maharashtra

அதேபோல் காங்கிரஸ் 99 இடங்களில் ஜெயித்துள்ளது. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‛இந்தியா' கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் ‛இந்தியா' கூட்டணிக்கு 272 எம்பிக்கள் இல்லை. மாறாக பாஜக கூட்டணிக்கு 292 எம்பிக்கள் உள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகளின் எம்பிக்களின் ஆதரவில் நாளை 3வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கிறார். மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

இந்நிலையில் தான் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் பாஜக கூட்டணியில் உள்ள எம்பிக்கள் ‛இந்தியா' கூட்டணிக்கும், ‛இந்தியா' கூட்டணியில் உள்ள எம்பிக்கள் பாஜகவின் கூட்டணிக்கும் அணி மாறலாம் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) கட்சியில் இருந்து 2 எம்பிக்கள் பாஜக கூட்டணியில் உள்ள மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் தொடர்பில் உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவை சேர்ந்த தானே எம்பி நரேஷ் மாஸ்கி கூறுகையில், ‛‛உத்தவ் தாக்கரே சிவசேனாவின் 2 எம்பிக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். உத்தவ் தாக்கரேவின் செயல்பாட்டில் இருவரும் அதிருப்தியில் உள்ளனர்'' என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேரும் விரைவில் ‛இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரே சிவசேனாவில் இருந்து பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு வருகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதோடு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை சேர்ந்த தானே எம்பி நரேஷ் மாஸ்கி கூறுவது போல் அவர்கள் உத்தவ் தாக்கரே மீதான அதிருப்தியால் அவர்களை தொடர்பு கொண்டனரா, இல்லாவிட்டால் இதன் பின்னணியில் குதிரை பேரம் நடத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மகாராஷ்டிராவை பொறுத்தவரை மொத்தம் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் ‛இந்தியா' கூட்டணி சார்பில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுபுறம் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாக களம் இறங்கின.

இதில் காங்கிரஸ் 13 தொகுதிகள், சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 8 தொகுதிகள், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி 9 தொகுதிகள் என மொத்தம் 30 தொகுதிகளை ‛இந்தியா ' கூட்டணி கைப்பற்றியது. அதேவேளையில் பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்கள், பாஜக 9 இடங்கள், மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடம் என மொத்தம் 17 இடங்களை கைப்பற்றியது. ஒரு தொகுதியில் சுயேச்சை வென்றார்.

இந்நிலையில் தான் உத்தவ் தாக்கரேவின் 2 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் தொடர்பில் உள்ளதாக அந்த கட்சியின் தானே எம்பி நரேஷ் மாஸ்கி கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இது தற்போது தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+