மண் அள்ளுவதை தடுக்க கூடாது.. பெண் ஐபிஎஸ் அதிகாரியை வீடியோ காலில் மிரட்டிய துணை முதல்வர்! பரபரப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்க போன பெண் ஐபிஎஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு துணை முதல்வர் அஜித் பவார் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மிரட்டியது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான், துணை முதல்வர் அஜித் பவார் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சட்டவிரோதமாக மண் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அவர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்து உத்தரவிட்டது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் கார்மலா தாலுகா குர்து கிராமத்தில் சட்டவிரோதமாக ஒரு கும்பல் மண் அள்ளியது. இந்த மண் சாலை பணிகளுக்கு கொண்டு செல்லப்பபட்டது. இதுதொடர்பாக புகார் எழுந்தது. இந்த பகாரை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார். பெண் ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணா நேரடியாக ஸ்பாட்டுக்கு சென்றார்.
அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாபா ஜெகதீப் என்பவர் இருந்தார். அவர் உடனடியாக அஜித் பவாருக்கு தனது செல்போனில் இருந்து போன் செய்தார். அதன்பிறகு அஜித் பவார் பேசுவதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி அஞ்சனா கிருஷ்ணாவிடம் வழங்கினார். அதனை வாங்கிய அஞ்சனா கிருஷ்ணா, ‛‛‛‛நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் பேசுவது துணை முதல்வர் தானா? என்பது எனக்கு தெரியவில்லை. இதனால் எனது நம்பருக்கு நேரடியாக போன் செய்ய முடியுமா?'' என்றார்.
இதனால் அஜித் பவார் டென்ஷனானார். அதோடு பெண் ஐபிஎஸ் அதிகாரியை கடிந்து கொண்டார். அஜித் பவார் கூறுகையில், ‛‛உன் மீது நடவடிக்கை எடுப்பேன். துணை முதல்வர் பேசுவதாக கூறுகிறேன். என்னையே உனக்கு நேரடியாக போன் செய்ய சொல்கிறாய். என் எண்ணை குறித்து கொள். வாட்ஸ்அப்பில் போன் செய்.. எவ்வளவு தைரியம் உனக்கு'' என்று மிரட்டினார்.
அதுமட்டுமின்றி உடனடியாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சனா கிருஷ்ணாவுக்கு வீடியோ கால் செய்தார் அஜித் பவார். அப்போது மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறியதோடு, அவரது செயலை கண்டித்துள்ளதாக கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications