கவுன்சிலிங்.. தொடர் மருத்துவம்.. பல நாளாக கஷ்டப்பட்ட சுஷாந்த்சிங்.. தற்கொலைக்கு காரணம் என்ன?

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் தற்கொலைக்கான காரணங்கள் வெளியாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் தற்கொலைக்கான காரணங்கள் வெளியாகி வருகிறது.

Recommended Video

    தீவிர Depression... Sushant Singh முடிவுக்கு என்ன காரணம்?

    பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் தனது மும்பை வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டார். வீட்டு அறையில் தூக்கு மாட்டி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

    பாலிவுட் நடிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்க எல்லோருக்கும் இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த்சிங் மரணம் தொடர்பாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    சுஷாந்த்சிங் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் தற்கொலைக்கான காரணங்கள் வெளியாகி வருகிறது. இவர் தற்கொலை முழுக்க முழுக்க சொந்த காரணத்திற்காக மட்டும்தான் என்று கூறுகிறார்கள். இவருக்கு depression எனப்படும் மன அழுத்த பிரச்சனையில் கஷ்டப்பட்டு வந்துள்ளார். தனது நண்பர்களிடம் கூட இது குறித்து கூறியுள்ளார்.

    சிகிச்சை மேற்கொண்டார்

    சிகிச்சை மேற்கொண்டார்

    தனக்கு மன அழுத்தம் இருந்த காரணத்தால் சுஷாந்த்சிங் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். மும்பையில் பிரபல மன ஆலோசகரிடம் இவர் கவுன்சலிங் சென்று இருக்கிறார். சிட்டிங் முறையில் நீண்ட நாட்களாக கவுன்சிலிங் சென்று இருக்கிறார். அதேபோல் பல்வேறு தெரபி வகுப்புகளுக்கும் சென்று உள்ளார்.

    வாழும் கலை அமைப்பு

    வாழும் கலை அமைப்பு

    அதேபோல் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் பிரபல வாழும் கலை அமைப்பிலும் அவ்வவ்போது தியானம் செய்ய சென்றுள்ளார். மன அழுத்தத்தில் இருந்து வெளியேற இவர் தீவிரமாக முயன்று உள்ளார். இதற்காக தியானம், மருத்துவம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்தி உள்ளார். இவருக்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம் என்று விவரம் வெளியாகவில்லை.

    என்ன காரணம் இருக்கலாம்

    என்ன காரணம் இருக்கலாம்

    சிலருக்கு மன அழுத்தம் குறிப்பிட்ட காரணங்களால் ஏற்படும். ஆனால் சிலருக்கு எந்த காரணமும் இன்றி மன அழுத்தம் ஏற்படும். சுஷாந்த்சிங் எதனால் கஷ்டப்பட்டு வந்தார் என்று விவரம் வெளியாகவில்லை. இவர் கடந்த சில வருடங்களாக ஹிட் படம் எதிலும் நடிக்கவில்லை. இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

    காதல் எப்படி

    இவர் பிரபல பாலிவுட் நடிகை ஒருவரிடம் காதலில் இருந்தார். ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வருகிறது. இவர் தனது டிவிட்டரில் கவர் போட்டோவில் கூட THE STARRY NIGHT எனப்படும் வான்கோவின் ஓவியத்தை கவர் படமாக வைத்து இருக்கிறார். இதன் மூலம் தனது மன அழுத்தத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

    மேனேஜர் எப்படி

    மேனேஜர் எப்படி

    சுஷாந்த்சிங் முன்னாள் பெண் மேனேஜர் கடந்த ஜூன் 8ம் தேதி இதேபோல் தற்கொலை செய்து கொண்டார். அவர் பெயர் திஷா சலியான். மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் மறைவின் போது சுஷாந்த்சிங் மிகவும் உருக்கமாக அதற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+