காட்டிக்கொடுத்த பிங்க் துப்பட்டா.. உல்லாசம் அனுபவித்து பாலியல் தொழிலாளியை கொன்ற டிரைவர்.. சிக்கியது எப்படி?
மும்பை:பாலியல் பெண் தொழிலாளியுடன் ஆட்டோ டிரைவர் ஒருவர் உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பிறகு பணம் கொடுக்கும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாலியல் பெண் தொழிலாளியை அவர் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு தலைமறைவானார். இந்த வழக்கில் பிங்க் நிற துப்பட்டாவை வைத்து போலீசார் துப்பு துலக்கி புலன் விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவரை கைது செய்தது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மால்வானி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பெண் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலில் ஆடைகள் கிழிந்து இருந்தன. உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த பெண் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் போட்டோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் 46 வயது நிரம்பிய ஒரு பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அந்த பெண்ணை அடையாளம் கண்டு அதனை உறுதி செய்தனர்.
இதற்கிடையே தான் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் அந்த பெண் பாலியல் தொழிலாளி பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதும், அவர் கழுத்தை இறுக்கி கொல்லப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கொலையாளியை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது கொலையான பாலியல் தொழிலாளியின் தோழிகள் சில தகவல்களை தெரிவித்தனர்.
அதாவது அந்த பெண் தொழிலாளி கொலையாவதற்கு முன்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் அவரை அழைத்து சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் பாலியல் தொழிலாளி நின்ற பகுதியை சுற்றி உள்ள இடங்களில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஏராளமான ஆட்டோக்கள் சென்றது தெரியவந்து.
குறிப்பாக ஒரு ஆட்டோவில் பிங்க் நிற துப்பட்டா வெளியே பறந்தது. இது சிசிடிவி கேமராவில் தெரிந்தது. அந்த பிங்க் நிற துப்பட்டா என்பது கொலையான பெண் அணிந்திருந்த சல்வாருடன் ஒத்துப்போனது. இதையடுத்து அந்த ஆட்டோ பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்தனர். அதன்படி போலீசார் துப்பு துலக்கினார்.
விசாரணையில் அந்த பாலியல் தொழிலாளியை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவரின் பெயர் சந்திரபோல் சிங் என்ற நீட்டா (வயது 34) என்பது தெரியவந்தது. ஆட்டோ சங்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் அதனை போலீசார் உறுதி செய்தது. இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மும்பை வந்தது. தற்போது மதுராவில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மதுராவுக்கு சென்ற போலீசார் சந்திரபோல் சிங்கை கைது செய்தனர். அவர் மீது பலாத்காரம் மற்றும் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சந்திரபோல் சிங்கிடம் நடத்திய விசாரணையில் பணத்தகராறில் கொலை செய்து உடலை வீசி சென்றதை ஒப்புக்கொண்டார். பிங்க் துப்பட்டாவை வைத்து இந்த வழக்கை விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்த போலீசாரை மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications