நம்பி சென்ற சிறுவனை.. பலாத்காரம் செய்த திருமணமான பெண்.. வெலவெலத்துபோன சிறுவனின் குடும்பம்! ஷாக்
15 வயது சிறுவனை ஏற்கனவே திருமணமான பெண் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 வயது சிறுவனிடம் பெண் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறி ஷாக் சம்பவம் நடந்துள்ளது. போலீசார் இந்தச் சம்பவத்தில் நடத்திய விசாரணையில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகம் பதிவு செய்யப்படுவதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக டேட்டாக்களிலும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. பெண் ஒருவர் இளம் சிறுவனிடம் பாலியல் உறவு வைத்துக் கொண்ட பகீர் சம்பவம் அங்கு நடந்துள்ளது.

மைனர்
பொதுவாக நாட்டில் சிறார்களைக் குறிவைத்து பாலியல் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. வெளியே சொல்ல மாட்டார்கள் அல்லது சொன்னாலும் யாரும் பெரிதாக நம்ப மாட்டார்கள் என்று கருதுவதாலேயே மனித மிருகங்கள் சிறார்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுகின்றனர். சிறுவர்கள் இதுபோல சொல்வதைப் பெற்றோர் பொறுமையாகக் கேட்க வேண்டும் என்றே பல்வேறு வல்லுநர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், சிறார்கள் புகார் அளிக்க 1098 என்ற கட்டணமில்லா இலவச எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நடந்துள்ளது. அங்குள்ள கல்யாண் என்ற பகுதியில் 15 வயது சிறுவனைப் பெண் ஒருவர் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 32 வயதான அந்த பெண், சிறுவனை பலாத்காரம் செய்ததாகச் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் பகுதியில் அந்த சிறுவனின் குடும்பம் வசித்து வரும் நிலையில், அந்தப் பெண் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமான பெண்
அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏற்கனவே திருமணமான அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணுக்கு சில காலத்திற்கு முன்பு அந்த மைனர் சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு அந்த சிறுவனுடன் அந்த பெண் உடலுறவும் வைத்துக் கொண்டுள்ளார். மேலும், மைனர் சிறுவன் தன்னுடன் தொடர்பில் இருக்க 20000 ரூபாய் மதிப்புள்ள புதிய மொபைலையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

பெற்றோர் சந்தேகம்
இதற்கிடையே சிறுவனின் நடத்தையில் அவரது பெற்றோர் மாற்றத்தைக் கண்டுள்ளனர். மேலும், மகனின் நடவடிக்கை அருவருக்கத்தக்க வகையில் மாறுவதையும் பெற்றோர் உணர்ந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆசிரியர் மூலம் மகனிடம் நடந்தது குறித்துக் கேட்கச் சொல்லியுள்ளனர். அப்போது ஆசிரியர்கள் கேட்டத்தில் தான் அந்த சிறுவன் தனக்கு நேர்ந்ததைச் சொல்லியுள்ளார். மேலும், வயதான பெண்ணுடன் தனக்கு இருக்கும் பாலியல் உறவு குறித்தும் தெரிவித்துள்ளான்.

ஷாக் சம்பவம்
இதையடுத்து இது குறித்து ஆசிரியர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டவுடன் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். முதலில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர் தனது மகனை விட்டுவிடும்படியும் இனி மீட் செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளனர். இருப்பினும், அந்த சிறுவனை அந்த பெண் விடவில்லை. தொடர்ந்து தனிமையில் மீட் செய்யலாம் என்றே கூறி வந்துள்ளார்.

புகார்
இதுவும் பெற்றோருக்குத் தெரிய வர அதிர்ந்து போனார்கள். எங்கு தங்கள் பிள்ளையின் வாழ்க்கை சீரழிந்துவிடுமோ என்று அஞ்சிய பெற்றோர், கடைசியில் இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளனர். அப்போது தான் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய சட்டப்படி மைனர் சிறுவர்களுடன் ஒப்புதலுடன் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரமாகவே கருதப்படும். அதன் அடிப்படையில் ஏற்கனவே திருமணமான அந்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications