சாதாரண தண்ணீர் டம்ளர்.. திறந்த பார்த்தால் 4 கோடி தங்கம்.. மும்பை விமானத்தில் சிக்கியது எப்படி?
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு பக்ரைன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய இந்திய பயணி ஒருவரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த பயணியின் நடவடிக்கையில் தீவிர சந்தேகம் எழுந்ததால் அவரது உடைமைகளை அதிகாரிகள் துருவி துருவி சோதித்தனர். ஆனால் உடைமைகளில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவர் வைத்திருந்த தண்ணீர் டம்ளர் வித்தியாசமாக தெரிந்தது. அதனை சோதித்தபோது, அதில் 4 கோடி மதிப்புள்ள தங்கம் இருந்தது.
மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. எப்போதுமே மிகவும் பிஸியானவிமான நிலையம் ஆக மும்பை இருக்கிறது. 24 மணிநேரம் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள். இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் ஆகும்.

இங்கு பல்வேறு நாட்டு பயணிகள், உள்நாட்டு பயணிகள் வந்து செல்வதால், சோதனைகள் கடுமையாக இருக்கும்.வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருட்கள், விலைஉயர்ந்த பொருட்கள் கடத்தி வரப்படவதை தடுக்க வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடன், சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர சோதனை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு பக்ரைன் நாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய இந்திய பயணி ஒருவரிடம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அந்த பயணியின் நடவடிக்கையில் தீவிர சந்தேகம் எழுந்ததால் அவரது உடைமைகளை அதிகாரிகள் துருவி துருவி சோதித்தனர். ஆனால் உடைமைகளில் எதுவும் எந்த பொருளும் சிக்கவில்லை.. எனினும் சந்தேகம் இருந்தது. அப்போது அவர் கையில் வைத்திருந்த ஒரு சாதாரண "தண்ணீர் டம்ளர்" அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.
அந்த டம்ளரை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதற்குள் வித்தியாசமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 கேப்சூல்கள் சிக்கின. அவற்றை உடைத்து பார்த்தபோது, உள்ளே தங்கத்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கருவிகளால் கூட எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி தங்கத்தை பொடி செய்து, மெழுகுடன் கலந்து அவர்கள் கடத்தி வந்திருக்கிறார்.
இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்துகள்களின் மொத்த எடை 3.05 கிலோ. இதன் தரம் 24 கேரட் ஆகும். இன்றைய சந்தை மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 3.89 கோடி ஆகும். சுங்க சட்டத்தின் கீழ் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இதை கடத்தி வந்த பயணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்த சம்பவம் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications