அடேய்களா..! வாட்ச் 5 கோடி கிடையாது! ஆனால்? மூக்கில் மேல் விரல் வைக்க வைத்த பாண்ட்யா..!
மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் நடத்தப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மும்பை ஏர்போர்ட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக இன்று காலை செய்திகள் வெளியாகின. இதில் அவரிடம் இருந்து இரண்டு விலை உயர்ந்த வாட்ச்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.
துபாயில் இருந்து இவர் வாங்கி வந்த வாட்ச்களுக்கு பில் இல்லாத காரணத்தால் சுங்கத்துறை அதிகாரிகள் மும்பை ஏர்போர்ட்டில் அதை கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

விளக்கம்
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இதற்கு தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், கடந்த நவம்பர் 15ம் தேதி நான் துபாயில் இருந்து மும்பைக்கு வந்தேன். அதிகாலையில் ஏர்போர்ட்டில் என்னுடைய லக்கேஜை எடுத்த பின் நானே நேரடியாக மும்பை ஏர்போர்ட்டில் இருக்கும் சுங்கத்துறை கவுண்டருக்கு சுயமாக சென்றேன். நான் துபாயில் இருந்து வாங்கி வந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்தேன்.

ஏர்போர்ட்
இதற்கு இறக்குமதி வரி செலுத்த வேண்டும் என்று கூறினேன். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தவறான தகவல்கள் பரவுகின்றன. நானாகவே சென்றுதான் துபாயில் இருந்து வாங்கி வந்த பொருட்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். இதற்கான எந்த விதமான இறக்குமதி வரியை கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன். இதில் சுங்கத்துறை அதிகாரிகள் என்னுடைய ஆவணங்களை கேட்டனர்.

சோதனை
அதை நான் அவர்களிடம் அளித்தேன். சுங்க வரி தொடர்பாக இப்போது அதிகாரிகள் கணக்கீடுகளை செய்து வருகிறார்கள். அவர்கள் தெரிவிக்கும் தொகையை கொடுப்பதாக நான் உறுதி அளித்துள்ளேன். நான் வாங்கிய வாட்ச்களின் மதிப்பு 1.5 கோடி ரூபாய்தான். இணையத்தில் வரும் செய்திகள் போல 5 கோடி ரூபாய் கிடையாது. நான் சட்டத்தை மதிக்க கூடிய குடிமகன். அனைத்து அரசு அலுவலர்களையும் நான் மதிக்கிறேன்.

உண்மை என்ன
எனக்கு மும்பை ஏர்போர்ட்டில் சுங்கத்துறை நல்ல ஒத்துழைப்பு வழங்கினார்கள். நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினேன். இந்த சம்பவம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் என்ன ஆவணங்களை கேட்டாலும் வழங்க தயாராக இருக்கிறேன். நான் சட்டத்தை மீறியதாக வெளியாகும் செய்திகள் எதிலும் உண்மை கிடையாது, என்று ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications