"இந்தியா" கூட்டணி- திமுக டிஆர் பாலு உட்பட 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு
மும்பை: இந்தியா கூட்டணியில் திமுக எம்பி டிஆர் பால் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி "இந்தியா" கூட்டணியில் லோகோ, ஒருங்கிணைப்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மும்பையில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் இன்று ஒருங்கிணைப்புக் குழு குறித்து முடிவெடுக்கப்பட்டது. மொத்தம் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு விவரம்:
- காங்கிரஸ் கேசி வேணுகோபால்
- என்சிபி சரத்பவார்
- திமுக டிஆர் பாலு எம்பி
- சிவசேனா சஞ்சய் ராவத்
- ஆர்ஜேடி பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
- திரிணாமுல் அபிஷேக் பானர்ஜி
- ஆம் ஆத்மி ராகவ் சாத்தா
- சமாஜ்வாதி ஜாவேத் அலி கான்
- ஜேடியூ லாலன் சிங்
- ஜேஎம்எம் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
- சிபிஐ டி.ராஜா
- தேசிய மாநாட்டு கட்சி ஒமர் அப்துல்லா
- மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி
- சிபிஎம் (பின்னர் அறிவிப்பு)
முன்னதாக இன்றைய கூட்டத்தில் "இந்தியா"அணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரது பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. ஆனால் ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதேபோல "இந்தியா" கூட்டணி லோகோவும் வெளியிடப்படவில்லை.
மேலும் "இந்தியா" கூட்டணியில் 12 பேர் கொண்ட சமூக வலைதள குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு விவரம்:
- காங். சுப்ரியா ஶ்ரீநதே
- ஆர்ஜேடி சுமித் ஷர்மா
- எஸ்பி ஆஷிஸ் யாதவ், ராஜீவ் நிகாம்
- ஆம் ஆத்மி ராகவ்
- ஜேஎம்எம் அவிந்தானி
- பிடிபி இல்திஜா மெகபூபா
- சிபிஎம் பிராஞ்சல்
- சிபிஐ பால்சந்திர காங்கோ
- காங்கிரஸ் இப்ரா ஜான்
- சிபிஐஎம்எல் அருண் குமார்
- திரிணாமுல் காங்கிரஸ்












Click it and Unblock the Notifications