குஜராத்தியர்கள் இல்லாவிட்டால் பணமே இருக்காது.. வாய்கொடுத்து வம்பில் சிக்கிய மகாராஷ்டிரா ஆளுநர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: குஜராத்தியர்கள் மட்டும் இல்லையென்றால் பணமே இருக்காது என மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவியது. இந்த குழப்பம் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி மீது அதிருப்தி அடைந்த சிவசேனா எம்எல்ஏக்கள் குழுவாக அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்றனர்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் அதிகமானவர்கள் சென்றதால் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது.

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம்

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம்

இதையடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவுடன் கைகோர்த்த சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கைகோர்த்து ஆட்சி அமைத்தனர். சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்ளார். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனா எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து விலக வைத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததாக பாஜகவினரை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவுடன் கைகோர்த்த சிவசேனாவின் அதிருப்தி எம்எல்க்கள் கைகோர்த்து ஆட்சி அமைத்தனர். சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்ளார். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனா எம்எல்ஏக்களை கட்சியில் இருந்து விலக வைத்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்ததாக பாஜகவினரை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்

சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்

இந்நிலையில் தான் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் ஆளுநராக இருந்தாலும் கூட தேசிய அரசியலில் தொடர்ந்து பகத்சிங் கோஷ்யாரியின் பெயர் பேசப்பட்டு வருகிறது. தற்போது அவர் மும்பையின் அந்தேரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது தான் பேசும் பெருளாகி உள்ளது.

பணமே இருக்காது

பணமே இருக்காது

அந்த வீடியோவில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசுகையில், ‛‛மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேற்றினால் இந்த மாநிலத்தில் பணமே இருக்காது. குறிப்பாக மும்பை மற்றும் தானே முடங்கிவிடும். மேலும் இந்தியாவின் நிதிநிலைமைக்கான தலைநகராக மும்பை இருக்க முடியாது' என கூறியுள்ளார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியாவின் இந்த பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அதாவது எதிர்க்கட்சிகளாக உள்ள சிவசேனா, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வியுறுத்தி உள்ளனர். சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், ‛‛கடுமையாக உழைக்கும் மராத்திய மக்களை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அவமதித்துள்ளார். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் மராத்திய மக்கள் ஆளுநர் மூலம் அவமதிக்கப்படுகின்றனர்'' என குற்றம்சாட்டி இருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சச்சின் சாவந்த் ஆகியோரும் இந்த வீடியோவை ட்வீட் செய்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இப்படி பேசி இருக்கக்கூடாது என கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகை கூறுவது என்ன?

ஆளுநர் மாளிகை கூறுவது என்ன?

மேலும் இந்த விஷயத்தில் ராஜ்பவனில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில், ‛‛மும்பையின் பொருளாதார வளர்ச்சியில் ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி மக்களின் பங்கு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பேசியுள்ளார். இவர்கள் நாட்டில் எங்கு சென்றாலும் வியாபாரம் செய்வது மட்டுமல்லாமல், பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்குவதன் மூலம் தொண்டு செய்கிறார்கள்'' எனவும் தெரிவித்து அவர்களை பெருமைப்படுத்தி உள்ளார் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+