செதில் செதிலா உரிந்த உறுப்பு.. "விஷ சாப்பாடு" ஊட்டிய மனைவி.. குறுக்கே வந்த, ஈராக்கின் சதாம் உசேன்..!
கணவன், மாமியாரை விஷம் வைத்து கொன்ற பெண் வாக்குமூலம் தந்துள்ளார்
மும்பை: 2 உயிர்கள் துடிதுடித்து பறிபோன நிலையில், மும்பை போலீசார் இந்த கொலைகள் குறித்த விசாரணையை துவக்கி உள்ளனர்.. என்ன நடந்தது?
மும்பை சாண்டாக்ரூசை சேர்ந்தவர் கமல்நாத்.. 49 வயதாகிறது.. இவர் ஒரு ஜவுளி வியாபாரி.. மிகப்பெரிய தொழிலதிபரும்கூட.. மனைவி பெயர் காஜல்.
இவர்களுக்கு கல்யாணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது... கல்யாணம் ஆனதில் இருந்தே இவர்களுக்குள் பிரச்சனைதானாம். எப்ப பார்த்தாலும் சண்டை போட்டு வந்துள்ளார்கள்.. அடிக்கடி தகராறும் வந்து போயுள்ளது..

மாமியார்
கடந்த 2021ல் கணவரை விட்டு பிரிந்த காஜல் மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.. ஆனால், கணவரை பழிவாங்கவே அப்போது வீட்டிற்குள் நுழைந்தார் என்று யாருக்குமே தெரியாது. விதவிதமாக மனைவி சமைத்து போடவும், அதில் மயங்கி கிறங்கினார் கமல்நாத்.. ஆனால் அந்த சாப்பாட்டில் ஸ்லோ பாய்சனை கலந்து வந்துள்ளார் காஜல்.. முதலில், சயனைடு சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்க்க மாமியாருக்கு அதை தந்து டெஸ்ட் செய்துள்ளார் காஜல்.. மாமியார் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துவிடவும்தான், சயனைடு மீது காஜலுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

பாய்சன்
அதற்கு பிறகு கணவருக்கு சயனைடு சாப்பாடு கலந்து தர துவங்கி உள்ளார்.. கணவரும் உடம்பெல்லாம் விஷம் பரவி, உறுப்புகள் செயலிழந்து பாதிக்கப்பட்டார்.. சிகிச்சையும் பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டார்.. மாமியார், - கணவர் இருவருமே இறந்தபிறகுதான் கமல்நாத் குடும்பத்தினருக்கு லேசாக சந்தேகம் வந்துள்ளது.. அதுவும், கமல்நாத்துக்கு சிகிச்சை தந்த டாக்டர்கள் சொல்லவும்தான், இந்த விஷயமே வெளியே தெரியவந்தது.

நுரையீரல்கள்
முதன்முதலில், இந்த சந்தேகத்தை கிளப்பியதே டாக்டர்கள்தான்.. கமல்நாத்துக்கு சிகிச்சையளித்த டாக்டர் ஆர்.கோயல் சொல்லும்போது, "கமல்காந்த் ஷாவின் ரத்தத்தில், அதிக அளவு விஷம் கலந்திருந்தது... அவரது நரம்பு மண்டலம், நுரையீரல், இதயம், சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய தாலியம் என்ற உலோகமும் வழக்கத்தைவிட 350 மடங்கு அதிகமாக இருந்தது.. விஷத்தையும் தாலியத்தையும் சாப்பாடு மூலம் கமல்காந்த்துக்கு யாரோ கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் சொல்லவும்தான், குடும்பத்தினருக்கே சந்தேகம் ஆரம்பமானது.

கள்ளக்காதல்
அதற்கு பிறகுதான், கமல்நாத் குடும்பத்தில் புகார் தந்துள்ளார்.. இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி கிருஷ்ணகாந்த் உபாத்யாயா செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "கமல்காந்த்துக்கும், அவரின் மனைவி காஜலுக்கும் இடையே சுமுக உறவு இல்லை... அதனால், ஹிதேஷ் ஜெயின் என்பவரோடு கள்ளக்காதல் உறவு காஜலுக்கு இருந்து வந்துள்ளது.. அவரது துணையுடன்தான் கமல்நாத்தை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார்.. கமல்நாத்தை எப்படி கொலை செய்யலாம் என்று கள்ளஜோடி 2 பேரும் இன்டர்நெட்டில் ஆராய்ந்துள்ளனர்.

சதாம் உசேன்
அப்போதுதான், ஈராக்கின் சதாம் உசேன் தன் எதிரிகளை ஸ்லோ பாய்சன் கொடுத்துக் கொலை செய்த செய்திகளை இந்த ஜோடி படித்துள்ளது.. பிறகு, டெல்லியை சேர்ந்த வருண் அரோரா, தன் மாமியாருக்கும், மைத்துனிக்கும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்தது விவரங்களையும் தேடி படித்துள்ளனர்.. இந்த க்ரைம் செய்திகளை படித்துதான், சாப்பாட்டில் விஷம் வைப்பது என்ற முடிவுக்கு கள்ளக்காதலர்கள் வந்துள்ளனர். அதற்கு பிறகுதான், சயனைடு, தாலியம் ஏற்பாடு செய்துள்ளனர்.. கமல்காந்த்தின் அம்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொடுத்து பரிசோதித்து பார்த்து, பிறகுதான் கணவருக்கும் விஷத்தை தந்துள்ளனர்" என்றார்.

இளநீர் + ஜூஸ்
இதற்கு பிறகு, காஜல் போலீசாரிடம் தந்துள்ள வாக்குமூலத்தில், "என்னுடைய மாமியாருக்கு சாப்பாட்டில்தான் விஷத்தை கலந்தேன்.. அதற்கு பிறகுதான், தண்ணீரில் விஷத்தைக் கலந்துகொடுத்தேன்... தினமும் 6-8 முறை தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் இவைகள் எல்லாவற்றிலும் விஷத்தைக் கலந்து கொடுத்துவந்தேன். அது சக்ஸஸ் ஆகிவிட்டது.. அதே பாணியில் என்னுடைய கணவனுக்கும் விஷத்தைக் கலந்து கொடுக்க ஆரம்பித்தேன்.. ஆன்லைன் மூலம் விஷத்தை ஆர்டர் செய்து வாங்கி தந்தது ஹிதேஷ் தான்.. அதேபோல, தாலியத்தைத் எனக்கு தெரிந்த ஒரு மருந்து வியாபாரியிடமிருந்து வாங்கினேன்" என்று காஜல் கூறியுள்ளார்.

ஜூஸ் பாய்சன்
கோவித்துக் கொண்டு, அம்மா வீட்டில் இருந்தபோதே, சயனைடுவை வாங்கி தயாராக கையில் வைத்து கொண்டாராம் காஜல்.. மாமியார் வீட்டுக்கு வந்ததுமே கிச்சன் பொறுப்பை தன்னிடம் வைத்துக் கொண்டு, விதவிதமாக சமைத்துள்ளார்.. மாமியார் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாலும்கூட, அதில் கொஞ்சம் சயனைடு கலந்துடுவாராம். தண்ணீர், இளநீர், ஜூஸ், பால் இப்படி எல்லாவற்றிலுமே ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்து வந்திருக்கிறார்... மாமியார் - கணவர் இருவருக்கும் டெஸ்ட் எடுத்ததில், இருவரின் ரத்தத்திலுமே ஹெவி மெட்டல் இருப்பது தெரிய வந்திருக்கிறது... அதாவது, ரத்தத்தில் ஆர்சனிக், தாலியம் போன்றவை அதிக அளவில் உற்பத்தி ஆகி இருந்ததாம். நிறைய டெஸ்ட்களை செய்து, இதை கண்டுபிடிக்கவே பல நாட்கள் ஆகிவிட்டதால், சிகிச்சையும் பலனளிக்காமல் போய்விட்டது என்கிறார்கள்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications