மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏற்கனவே 2 புருஷன்.. புதிதாக வந்த கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம்.. காவல் நிலையத்தில் கதறும் "கணவர்கள்"

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் தனது 2 கணவர்களை விட்டுவிட்டு சமூக வலைதளத்தில் பழக்கமான கள்ளக்காதலனான இன்னொரு நபருடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இந்நிலையில் மனைவியை கண்டுப்பிடித்து தரும்படி 2 கணவர்களும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தமிழில் ‛மருதமலை' படத்தில் நடிகர் வடிவேல் போலீசாக நடித்திருப்பார். இந்த படத்தில் ஒரு காட்சி வரும். அதாவது கழுத்தில் மாலை அணிந்து காதலிப்பதாக ஒரு ஜோடி வருவார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி வடிவேலுவிடம் அவர்கள் கூறுவர்.

ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி! ஒரு மாணவி.. பப்.. எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்.. இந்தியாவையே உலுக்கிய கூட்டு வன்புணர்வு! கொடூர பின்னணி!

இதுபற்றி விசாரித்தபோது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்து இருப்பதும், நான்காவது திருமணத்துக்காக போலீஸ் நிலையம் வந்திருப்பதும் தெரியவரும். இந்த பாணியில் கொஞ்சம் வித்தியாசமாக மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

காதல் திருமணம் செய்த பெண்

காதல் திருமணம் செய்த பெண்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே வசித்து வருபவர் ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொத்தனார் ஒருவரை காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து குடும்பம் நடத்தினர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

‛மிஸ்டுகால்’ பழக்கத்தால் 2வது திருமணம்

‛மிஸ்டுகால்’ பழக்கத்தால் 2வது திருமணம்

இந்நிலையில் 2020ல் ரம்யாவுக்கு பைபர் தொழில் செய்து வரும் நபருடன் ‛மிஸ்டுகால்' மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர் அந்த நபரை 2வது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் தனது காதல் கணவர் மற்றும் 2 குழந்தைகளை பிரிந்து சென்று கள்ளக்காதலைனை 2020ல் ரம்யா கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் கோவிலில் நடந்தது.

மாயமான ரம்யா

மாயமான ரம்யா

இதையடுத்து ரம்யா தனது 2வது கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது தாயின் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி ரம்யா வீட்டை விட்டு புறப்பட்டார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயின் வீட்டுக்கும் அவர் செல்லவில்லை. இதனால் 2வது கணவருக்கு சந்தேகம் எழுந்தது.

3வது நபருடன் ஓட்டம்

3வது நபருடன் ஓட்டம்

இந்நிலையில் தான் சமூக வலைதளத்தில் பழக்கமான நபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதும், இதனால் 2வது கணவரை பிரிந்து அந்த நபருடன் சேர்ந்து வாழ்வதும் தெரியவந்தது. இதனால் 2வது கணவர் அதிர்ச்சியடைந்தார். மேலும் ரம்யா இல்லாமல் வாழ முடியாது என நினைத்தார். இந்நிலையில் தான் அவருக்கு ஒரு யோசனை வந்தது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

அதன்படி 2வது கணவர் ரம்யாவின் முதல் கணவரை தேடிக்கண்டுப்பிடித்தார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து ரம்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது சோனேகான் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இதுபற்றி இருப்பினும் அவர்கள் எங்கு வசிக்கின்றனர் என்ற விபரங்கள் தெரியவில்லை.

ஆலோசனை

ஆலோசனை

இதற்கிடையே பரேசா பிரிவு சார்பில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது 2வது கணவர் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததாகவும், முதல் கணவர் அவ்வாறு எதுவும் கூறவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து ரம்யாவின் குழந்தைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

English summary
In Maharashtra two men approached policemen seeking intervention to bring their estranged wife back
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X