‛அவ்வளவு தொகுதிலாம் தரமுடியாது’.. உத்தவ் தாக்கரேவிடம் மோதும் காங்கிரஸ்! ‛இந்தியா’ கூட்டணியில் ஷாக்
மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் மகராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி கேட்ட தொகுதிகளை கொடுக்க காங்கிரஸ் மறுத்துள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மகராஷ்டிராவில் நீண்டகாலமாக பாஜக கூட்டணியில் சிவசேனா கட்சி இருந்தது. ஆனால் கடந்த 2019 சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

உத்தவ் தாக்கரே முதல்வரானார். இரண்டரை ஆண்டு ஆட்சி முடிந்த நிலையில் கடந்த ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 30க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் அணி பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
இதையடுத்து சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு பாடம் புகட்ட ‛இந்தியா' கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி இணைந்தது. மகராஷ்டிராவை பொறுத்தமட்டில் ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே அணி இடையே நல்ல நட்பு உள்ளது. இதனால் அங்கு நாடாளுமன்ற தொகுதி பங்கீடு என்பது பிரச்சனையின்றி முடியும் என கூறப்பட்டது.
அதாவது மகாராஷ்டிராவில் மொத்தம் 48 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தலா 16 தொகுதிகளில் களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகின. கடந்த வாரம் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஏஐசிசி பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் தான் தற்போது ‛இந்தியா' கூட்டணி சார்பில் மகராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், உத்தவ் தாக்கரே ஆகியோர் சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது உத்தவ் தாக்கரே தரப்பில் மகராஷ்டிராவில் 23 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அவ்வளவு தொகுதிகளை எல்லாம் ஒதுக்கீடு செய்ய முடியாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா தற்போது 2 பிரிவாக பிரிந்துள்ள நிலையில் இவ்வளவு தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதுபற்றி மகராஷ்டிரா முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிர காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் சவான் கூறுகையில், ‛‛ஒவ்வொரு கட்சியும் அதிக இடங்களைப் பெற விரும்பினாலும் கூட தற்போதைய சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் 23 இடங்களுக்கான கோரிக்கை அதிகமாக உள்ளது.
சிவசேனா 23 இடங்களை போட்டியிட வழங்கும்படி கோரலாம், ஆனால் அவர்கள் அந்த தொகுதிகளில் என்ன செய்வார்கள்?.. சிவசேனா தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். நெருக்கடி நிலையில் உத்தவ் தாக்கரே உள்ளார்'' என்றார். இதனால் மகராஷ்டிராவில் ‛இந்தியா' கூட்டணியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications