"போர் நிறுத்தத்துக்கு நன்றி".. சல்மான் கான் பதிவை பார்த்ததுமே டென்ஷனான நெட்டிசன்கள்.. என்னாச்சு?
மும்பை: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் அதிகரித்தது. நம் நாட்டின் அதிரடி தாக்குதலுக்கு பயந்து பாகிஸ்தான் நேற்று மண்டியிட்டு பணிந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சிய நிலையில் நம் நாடு ஒப்புக்கொண்டது. இதனால் தற்போது போர் பதற்றம் தணிந்து எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இதற்கிடையே தான் போர் நிறுத்தம் தொடர்பாக கடவுளுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சல்மான் கான் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் அந்த பதிவை டெலிட் செய்தார். சல்மான் கானின் பதிவுக்கு ஏன் எதிர்ப்பு கிளம்பியது? வாங்க பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த புதன் கிழமை முதல் 4 நாட்களாக தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டு வந்தது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு நம் படை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதில் 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதையடுத்து நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாகிஸ்தானில் 3 விமானப்படை தளங்கள் ஏவுகணைகளை ஏவி நாம் அழித்தோம். இதனால் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் என்பது அதிகரித்தது. இதையடுத்து நேற்று பாகிஸ்தான் கெஞ்சியதை தொடர்ந்து போர் நிறுத்தத்துக்கு நம் நாடு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து இன்று முதல் எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
இதற்கிடையே தான் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சல்மான் கானை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த விமர்சனத்தை தாங்க முடியாத சல்மான் கான் அதனை டெலிட் செய்தார். திடீரென்று சல்மான் கான் மீது ரசிகர்கள் டென்ஷனானது ஏன்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
அதாவது பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பதிலடியாக கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் கடுமையாக தாக்கியது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாதிகள் முகாம் மற்றும் அந்த நாட்டின் 3 விமானப்படை தளம் உள்ளிட்டவற்றை அழித்தது. இந்த நடவடிக்கைகள் கடந்த புதன் கிழமை முதல் நேற்று வரை 4 நாட்கள் நடந்தது.
பதிலுக்கு நம்மை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நம் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானை கதற கதற தாக்கியது நம் நாடு. இந்த அதிரடி தாக்குதலுக்கு பயந்து தான் நேற்று பாகிஸ்தான் நம்மிடம் போர் நிறுத்தத்துக்கு கெஞ்சியது. நம் நாடும் பாவம் பார்த்து போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தது.
இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛Thank God for the ceasefire'' என்று பதிவிட்டு இருந்தார். அதாவது ‛‛போர் நிறுத்தத்துக்கு நன்றி கடவுளே'' என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த பலரும் சல்மான் கானை விமர்சனம் செய்ய தொடங்கினர். ஏனென்றால் கடந்த 4 நாட்களாக ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் படைகள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தன. ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்களை அழித்தன.
இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி சல்மான் கான் பாராட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிடாத நிலையில் போர் நிறுத்தத்துக்கு மட்டும் நன்றி தெரிவித்தது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஒருவர், ‛‛ஆபரேஷன் சிந்தூர் பற்றி ஏன் ஒரு பதிவு கூட செய்யவில்லை'' என்று கேள்வி எழுப்பினார். இன்னொருவரோ, ‛‛பாகிஸ்தானுக்கு எதிராக நம் நாடு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதுவும் சொல்லவில்லை'' என்று குறிப்பிட்டார்.
இன்னும் சிலர் அவரை விமர்சனம் செய்தனர். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் சல்மான் கான் அந்த பதிவை டெலிட் செய்தார். இருப்பினும் அவர் பதிவிட்ட பதிவின் ஸ்கிரின்ஷாட் தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அதனை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேவேளையில் சல்மான் கானின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
-
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications