சூப்பர்ல.. 21 கி.மீ தண்ணீருக்கு அடியில் செல்லும் முதல் புல்லட் ரயில்.. மாஸ் காட்டும் இந்தியன் ரயில்வே

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா முதல் குஜராத் வரை விரைவில் புல்லட் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த ரயில் 21 தூரம் வரை நீருக்கு அடியில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகள் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இந்நிலையில் இந்த ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

 Indias first bullet train to run from Mumbai to Ahmedabad travels 21 km underwater

அப்படி வந்ததுதான் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிலையில், விரையில் நாட்டின் முதல் புல்லட் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது மகாராஷ்டிராவின் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரை இந்த ரயில் இயக்கப்படும் எனவும் இதற்காக ரூ.1.08 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு ரயில் இயக்கப்படும் என அறவித்திருந்த நிலையில் தற்போது வரை வெறும் 26% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களே இந்த தாமதத்திற்கு காரணம் என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. என இன்னும் 4 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு கூறியுள்ள நிலையில் தற்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாட்டின் முதல் புல்லட் ரயிலான இது மகாராஷ்டிராவின் தானே பகுதியையொட்டி 21 கி.மீ நீருக்கு அடியில் பயணிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் நீருக்கடியில் பயணிக்கும் முதல் இந்திய ரயில் என்கிற பெருமையை இந்த ரயில் பெற இருக்கிறது. அதே போல இந்த பயணமும் மக்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மும்பையிலிருந்து புறப்படும் இந்த ரயில் மொத்தம் 3 நிறுத்தங்களில்தான் நிற்கும். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நிறுத்தத்திலும், குஜராத் மாநிலத்தில் சூரத், சபர்மதி ஆகிய இடங்களிலும் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். முதல் புல்லட் ரயில், நீருக்கடியில் செல்லும் முதல் ரயில் என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த ரயில் கொண்டிருப்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+