ராணுவ வீரரின் உயிர் பிரிந்த நொடி.. மனைவிக்கு பிறந்த குழந்தை.. கண் கலங்க வைத்த சம்பவம்
மும்பை: மகாராஷ்டிராவின் மனைவியின் பிரசவத்துக்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் மகள் பிறப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாக சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதோடு குழந்தை பிறந்தாலும் கூட தனது கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவரது மனைவி ஸ்டெர்ச்சரில் வந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத் சட்டர்ஜி. இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்தது. அதன்பிறகு சில வாரங்களில் அவர் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு ராணுவ பணிக்கு சென்றார்.

இந்நிலையில் தான் அவரது மனைவி கர்ப்பமானார். இதையடுத்து பிரமோத் சட்டர்ஜி விடுமுறை எடுத்து ஊருக்கு வந்தார். பிரசவ சமயத்தில் மனைவியுடன் இருக்க வேண்டும் என்று அவர் ஊருக்கு வந்தார். இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இந்நிலையில் தான் அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வேளையில் பிரமோத் சட்டர்ஜி தனது பைக்கில் சென்றார். அப்போது குப்பை வாகனம் அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரமோத் சட்டர்ஜி தலையில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். மனைவி நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவரிடம் அதுபற்றி குடும்பத்தினர் தெரிவிக்காமல் சோகத்தில் மூழ்கினர்.
மனைவியின் பிரசவத்துக்காக விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்த பிரமோத் சட்டர்ஜி மகளை பார்க்காமலே மறைந்தார். இதற்கிடையே தான் பிரமோத் சட்டர்ஜி இறந்த அடுத்த ஒருமணிநேரத்தில் அவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. மேலும் கணவர் பிரமோத் சட்டர்ஜி மறைந்தது பற்றி அவரது மனைவிக்கு குடும்பத்தினர் தாமதமாக தெரிவித்தனர். அதை கேட்டு அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். கதறி அழுதார். அவரை குடும்பத்தினர் ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினர்.
மறைந்த ராணுவ வீரர் பிரமோத் சட்டர்ஜியின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ராணுவம் சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல் புதைக்கப்பட்டது. இந்த வேளையில் பிரமோத் சட்டர்ஜியின் உடலுக்கு மரியாதை செலுத்த அவரது மனைவி விரும்பினார். குடும்பத்தினர் வேண்டாம் என்று கூறியும் அவர் விடவில்லை. இதனால் அவர் ஸ்டெச்சரில் மருத்துவமனையில் இருந்து இறுதி சடங்கு நடக்கும் இடத்துக்கு சென்று மரியாதை செலுத்தி கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications