அனுஷ்கா பிரசவ அறையில் இருந்தப்ப.. வேறு அறையில் விராத் கோஹ்லி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
மும்பை: மருத்துவர்கள் அழைக்கும் போது கூட கிரிக்கெட் விளையாட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் வென்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விராத் கோஹ்லி கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறப்பதற்கான மகப்பேறு தேதியை மருத்துவர்கள் கொடுத்துவிட்டனர்.

போட்டி
இதையடுத்து மனைவியை பார்த்துக் கொள்வதற்காக அடுத்த போட்டிகளில் பங்கேற்காமல் இந்தியா திரும்பினார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து விராத் கோஹ்லி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அணி
அவர் கூறுகையில், குழந்தைக்கு தந்தையானது என் வாழ்வில் மிகச் சிறந்த தருணம். இதை இந்தியாவின் வெற்றியுடன் ஒப்பிட முடியாது. நான் அணியில் இல்லாத போதிலும் அணியுடனான எனது தொடர்பு எப்போதும் இருக்கும்.

மொபைல்
நான் அங்கு இல்லையென்றாலும் நான் தொடர்ந்து கிரிக்கெட்டை பார்த்துக் கொண்டுதான் வந்தேன். மருத்துவமனையில் இருக்கும்போது டாக்டர்கள் உள்ளே என்னை அழைப்பதற்கு முன்பாக பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் பார்ட்னர்ஷிப்பை மொபைலில் பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றார் விராத் கோஹ்லி.

மகிழ்ச்சி
விராத் கோஹ்லி, அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாமிகா என பெயரிடப்பட்டுள்ளது. வாமிகா என்றால் துர்க்கையின் அவதாரம் என்று பொருளாம். வாமிகாவின் வரவால் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications