மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்ன புதுஸ்ஸா.. ஷீனா போரா உயிரோடுதான் இருக்கிறாராம்.. இந்திராணி முகர்ஜி பரபரப்பு கடிதம்

Google Oneindia Tamil News

மும்பை: கொல்லப்பட்டதாக சொல்லப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிபிஐ இயக்குநருக்கு சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி இந்திராணி முகர்ஜி. பீட்டர் முகர்ஜி இந்திராணியின் இரண்டாவது கணவர். இந்த விவகாரம் இந்திராணியின் மகள் (முதல் கணவருக்கு பிறந்தவர்) ஷீனா போராவிற்கு ஒரு புகைப்படத்தில் தனது தாயுடன் இருந்த போதுதான் தெரியவந்தது.

இதையடுத்து பீட்டரிடம் ஷீனாவை தனது தங்கை என்றே இந்திராணி அறிமுகம் செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் ஷீனா போராவை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திராணி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 13வது நாள்: இன்று 2 அவைகளிலும் என்ன நடக்கும்? நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 13வது நாள்: இன்று 2 அவைகளிலும் என்ன நடக்கும்?

துப்பாக்கியுடன் டிரைவர்

துப்பாக்கியுடன் டிரைவர்

இந்த சம்பவம் இந்திராணி முகர்ஜியின் டிரைவர் ஷியாம்வர் ராய் துப்பாக்கியுடன் பிடிபட்ட போது அவர் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து இந்திராணி கொலை செய்ததை அவர் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்திராணி முகர்ஜி

இந்திராணி முகர்ஜி

இந்த நிலையில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் தனது வழக்கறிஞர் சனா கான் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பிப்பார் என தெரிகிறது.

ஷீனா போரா

ஷீனா போரா

தான் கொலை செய்ததாக கூறப்பட்ட ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி முகர்ஜி தெரிவிக்கிறார். இதுகுறித்து இந்தியா டுடே செய்தியில் கூறியுள்ளதாவது: ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிறையில் உள்ள ஒரு பெண் கூறியுள்ளார். அவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாகவும் சொல்கிறார்.

ஷீனா போரா உயிருடன் இருக்கிறார்

ஷீனா போரா உயிருடன் இருக்கிறார்

எனவே சிபிஐ ஷீனா போரா உயிருடன் இருப்பது குறித்து கண்டறிய வேண்டும் என இந்திராணி முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு கடிதமும் எழுதியுள்ளார். எனவே இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இறந்ததாக கூறப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Indrani Mukherjee says that Sheena Bora is alive and she lives in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X