மொத்தமா போச்சு.. நிமிடங்களில் கரைந்த ரூ.7 லட்சம் கோடி... ரத்தச் சிவப்பில் பங்குச்சந்தை.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஈரான் போருக்கு இடையே.. கத்தார் மீதான தாக்குதலுக்கு இடையே.. இன்று இந்திய பங்குச்சந்தை திறந்ததும்.. நிமிட முட்கள் நகர நகர, முதலீட்டாளர்களின் இதயத் துடிப்பும் எகிறிக்கொண்டே இருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் அதலபாதாளத்தில் விழுந்ததைக் கண்டு தலையில் கைவைத்துவிட்டனர் சிறு முதலீட்டாளர்கள். சுமார் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டாளர்களின் செல்வம் கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் கரைந்து போனது.

தலையில் இடியாய் விழுந்த இந்தத் திடீர் வீழ்ச்சிக்கு பின்னணியில் இருக்கும் மூன்று முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

Iran attack on Qatar

1. மிரட்டும் கச்சா எண்ணெய்: $110-ஐத் தாண்டிய அதிர்ச்சி

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே உலுக்கும் சக்தியாக 'கச்சா எண்ணெய்' உருவெடுத்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு $110 என்ற அபாயக் கோட்டைத் தாண்டியுள்ளது. ஈரான் மற்றும் கத்தாரில் உள்ள முக்கிய எரிசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் இந்த விலையேற்றத்திற்கு உடனடித் தூண்டுகோல்.

இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, எண்ணெய் விலை உயர்வது என்பது பணவீக்கத்தை (Inflation) நேரடியாக எகிறச் செய்யும். இது நிறுவனங்களின் லாப வரம்பைக் குறைப்பதோடு, 2027 நிதியாண்டின் வருவாய் எதிர்பார்ப்புகளை முற்றிலும் சிதைத்துவிடும் என்ற அச்சம் சந்தையில் நிலவுகிறது.

2. போர் மேகங்கள்: ஈரானும் கத்தாரும்

மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் சூழல் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரானின் 'சவுத் பார்ஸ்' (South Pars) எரிவாயு வயல் மற்றும் கத்தாரின் 'ராஸ் லப்பான்' (Ras Laffan) தொழிற்பேட்டை - இது உலகின் மிக முக்கியமான எல்.என்.ஜி (LNG) மையங்களில் ஒன்று - ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உலகையே அதிரவைத்துள்ளன. இதனால் எரிசக்தி விநியோகத்தில் பெரும் தடை ஏற்படும் என்ற பயம் உலக நாடுகளைத் தொற்றிக்கொண்டது. இதன் எதிரொலிதான் இன்று இந்தியப் பங்குச்சந்தையில் எதிரொலித்த நிலநடுக்கம்.

3. வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள் (FPI Exit)

ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் சந்தைக்கு, அந்நிய நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPIs) வெளியேற்றம் பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் கடந்த 12 வர்த்தக நாட்களில், சுமார் ரூ.77,214 கோடி மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்றுத் தீர்த்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.6,400 கோடி வெளியேறுகிறது. இது இந்திய சந்தை மீதான நம்பிக்கையில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சந்தையில் நடந்தது என்ன? இன்றைய வர்த்தகத்தில் அதிக நஷ்டமடைந்த டாப் 5 பங்குகள்

HDFC Bank (8% வரை சரிவு):

இன்றைய சரிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது HDFC வங்கிதான். அதன் தலைவர் அதானு சக்ரவர்த்தி (Atanu Chakraborty) திடீரென ராஜினாமா செய்த செய்தி, வங்கித் துறை பங்குகளை நிலைகுலையச் செய்துள்ளது. இது இன்று 52 வார குறைந்தபட்ச விலையை எட்டியது.

Shriram Finance (5.1% சரிவு):

நிதி சேவைத் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனம் இன்று சந்தையின் சரிவில் சிக்கி பலத்த அடி வாங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்றதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Mahindra & Mahindra (M&M) (4.5% வரை சரிவு):

கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆட்டோமொபைல் துறையை நேரடியாகப் பாதிக்கும் என்பதால், எம் அண்ட் எம் பங்குகள் இன்று கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளானது.

Larsen & Toubro (L&T) (3.5% சரிவு):

உள்கட்டமைப்பு துறையின் ஜாம்பவானான எல் அண்ட் டி, சந்தை சரிவின் போது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்து 3 சதவீதத்திற்கு மேல் சரிந்தது.

Tata Motors (3.2% சரிவு):

உலகளாவிய சப்ளை செயின் பாதிப்பு மற்றும் எண்ணெய் விலை உயர்வு காரணமாக டாட்டா மோட்டார்ஸ் பங்குகளும் ரத்தச் சிவப்பில் வர்த்தகமானது.

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு: சந்தையின் இந்த அதிரடி வீழ்ச்சி ஒரு தற்காலிக அதிர்வா அல்லது நீண்ட கால சரிவின் ஆரம்பமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பதற்றத்தில் பங்குகளை விற்பதை விட, சந்தையின் போக்கை உன்னிப்பாக கவனிப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+