நொடிக்கு நொடி “டுவிஸ்ட்”.. மகா CM ஏக்நாத் ஷிண்டே ராஜினாமாவா? திடீர் மீட்டிங் ஏன்? அமைச்சர்கள் ஆவேசம்
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு அஜித் பவார் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில் இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதுகுறித்து சிவசேனா அமைச்சர்கள் விளக்கமளித்து உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அஜித் பவார் 29 தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுடன் சிவசேனா - பாஜக கூட்டணி ஆதரவு தெரிவித்து உள்ளதால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகலாம் என்றும் பேச்சு அடிபட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது வர்ஷா பங்களா இல்லத்தில் சிவசேனாவில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சில மணி நேரங்கள் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுகுறித்து கூட்டம் முடிந்து வெளியே வந்த மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சாமத் பேசுகையில், “முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டம் நடைபெற்றது. எதிர்வரும் மழைகால கூட்டத் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டோம். அதேபோல் மகாராஷ்டிரா சட்டப்பேரவைக் கூட்டம் குறித்து ஆலோசனை செய்தோம்.
சிவசேனா எம்.எல்.ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இயக்கத்தை வளர்ப்பது குறித்து நாங்கள் அலோசித்தோம். அஜித் பவாரின் வருகையால் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் இடையே எந்த அதிருப்தியும் இல்லை.
ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற தகவல்கள் அனைத்தும் வதந்தி. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் இருக்கிறோம்.” என்றார். இதேபோல், மகாராஷ்டிரா அமைச்சர் ஷம்புராஜ் தேசாயும் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வதாக வெளியான தகவலை மறுத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது. எங்களுக்கு 200 க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எந்த தலைவரும் அதிருப்தியாக இல்லை. அனைவரும் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையின் கீழ் உள்ளோம்.” என்றார்.
அதேபோல் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவிக்கையில், “எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக தொடர்வார். அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.” என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications