இந்தியாவுக்கு 2 புல்லட் ரயிலை இலவசமாக தரும் ஜப்பான்! ஆனா அதை நம்மால் யூஸ் பண்ண முடியாது! ஏன் தெரியுமா
மும்பை: மும்பை அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் பணிகள் படுவேகமாக நடந்து வரும் சூழலில், புல்லட் ரயில் பாதையில் சோதனை மேற்கொள்ள ஜப்பான் அரசு இலவசமாக ரயில்களை வழங்குகிறது. இது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தில் முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) தான் இந்த அதிவேக ரயில் பாதையைக் கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.. கடந்த 2021 நவம்பரில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

புல்லட் ரயில்
இத்திட்டத்திற்காக இதுவரை ஆறு ஆறுகளின் மீது பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பணிகள் சீராக நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு தொடக்கத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும் எனத் தெரிகிறது. கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து வரும் சூழலில், ஜப்பான் அதன் புகழ்பெற்ற ஷின்கான்சென் புல்லட் ரயில்களின் இரண்டு செட்களை இந்தியாவுக்கு இலவசமாக வழங்குகிறது. சோதனை ஓட்டம் நடத்த இந்த இரு ரயில்களை ஜப்பான் இலவசமாக வழங்குகிறது..
பயன்படுத்த முடியாது
புல்லட் ரயில்களில் பல வகைகள் உள்ள சூழலில், E5 மற்றும் E3 சீரியஸ்களில் இருந்து தலா ஒன்று என இரண்டு ரயில்களை ஆய்வு உபகரணங்களுடன் ஜப்பான் வழங்குகிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த ரயில்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதிக வெப்பநிலை மற்றும் பாதைகளில் உள்ள குப்பையால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட முக்கிய டேட்டாக்களை இதன் மூலம் சேகரிக்க முடியும். அதேநேரம் இந்த புல்லட் ரயில்களை நாம் பயணிகள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாது. வெறும் சோதனை ஓட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்
எதற்காக இந்த ரயில்கள்
மும்பை அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரயில் பாதை நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய திட்டமாகக் கருதப்படுகிறது. ஷின்கான்சென் ரயில்களைப் பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட சூழலில் ரயில் எப்படி இயங்குகிறது என்பது குறித்து துல்லியமான தகவல்களைச் சேகரிக்க முடியும். இந்த சோதனை ஓட்டம் என்பது E10 ரயில்களை எதிர்காலத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்ய அடித்தளமாக இருக்கும். 2030கள் முதல் இந்த E10 ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த தலைமுறை ரயில்கள் வரும் வரை, இந்த ரூட்டில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீட் ரயில்களைப் பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜப்பான் அரசு கடன்
புல்லட் ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை அதற்குத் தேவையான நிதியில் பெருமளவு ஜப்பானிய அரசிடம் இருந்த குறைந்த வட்டிக்குக் கடனாகவே பெறப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த செலவில் சுமார் 80 சதவிகிதம் கடனாகவே கிடைக்கிறது. அதேநேரம் செலவுகள் அதிகரித்து வருவதால், இரு நாடுகளும் இணைந்து புதிய லோன் கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.
இந்த திட்டம் கிழக்கு ஆசிய நாட்டின் சின்னமான ஷின்கான்சென் தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படுகிறது, எனவே ஜப்பானிய அரசாங்கத்திற்கும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வெளியீடு கூறுகிறது. இந்தியாவுக்கு ஜப்பான் வழங்கும் E5 சீரியஸ் ரயில் அதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்திற்காகப் புகழ்பெற்றதாகும். மறுபுறம், E3 ரயில் என்பது செயல்திறன் மற்றும் சிறந்த பயணிகளின் வசதிகளை வழங்கியதற்குப் பெயர் பெற்றது.
ரயில்வே அமைச்சர்
முன்னதாக இந்தத் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "புல்லட் ரயில் திட்டத்தைப் பொருளாதாரங்களை ஒருங்கிணைக்கும் திட்டமாகவே பார்க்க வேண்டும். இந்தத் திட்டம் மூலம் மும்பை, தானே, வாபி, பரோடா, சூரத், ஆனந்த் மற்றும் அகமதாபாத் ஒரே பொருளாதாரமாக மாறும். நீங்கள் சூரத்தில் காலை உணவைச் சாப்பிடலாம், மும்பையில் உங்கள் வேலையை முடித்துவிட்டு இரவு மீண்டும் வீடு திரும்பலாம்" என்று கூறியிருந்தார்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications