சரத்பவாருடன் மீண்டும் அதிருப்தி கோஷ்டி சந்திப்பு! எதிர்க்கட்சிகளுடன் இணைவதை தடுக்க பாஜக பரபர மூவ்?
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜகவில் இணைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டிகள் இன்று 2-வது நாளாக அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவாரை நேரில் சந்தித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அதிருப்தி கோஷ்டியின் இந்த சந்திப்பு கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது.
உடைந்த சரத்பவார் கட்சி: சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் எனும் என்சிபி அண்மையில் இரண்டாக திடீரென பிளவுபடுத்தப்பட்டது. அஜித்பவார் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா- பாஜக கூட்டணி அரசில் இணைந்தனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். இதர 8 பேர் அமைச்சர்களாகிவிட்டனர். தங்களுக்கு 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது; தாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றெல்லாம் அஜித் பவார் தரப்பு உரிமை கோரி வருகிறது. இதற்கு பதிலடியாக அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கும் செய்யும் நடவடிக்கைகளை சரத்பவார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை: நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளுவதை தடுக்கவே என்சிபியை பாஜக உடைத்துவிட்டது என்பது பொதுவான விமர்சனம். தற்போது பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளையும் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர உள்ளது. இந்நிலையில் திடீரென நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவர்களான அஜித் பவார், ஃபிரபுல் பட்டேல் உள்ளிட்டோர் மும்பையில் சரத்பவாரை நேரில் சந்தித்தனர். அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டு இருக்க வேண்டும்; அதற்கேற்ப சரத்பவார் முடிவுகளை எடுக்க வேண்டும் என தாங்கள் வலியுறுத்தியதாகவும் ஆனால் சரத்பவார் எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
சரத்பவார் பங்கேற்பு: இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்க மாட்டார் என்ற செய்தி பெரும் பரபரப்புடன் பகிரப்பட்டன. ஆனால் தேசியவாத காங்கிரஸ் உடனடியாக இதனை மறுத்து பெங்களூர் கூட்டத்தி சரத்பவார் பங்கேற்பார் என அறிவித்தது. காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இதனை உறுதி செய்திருந்தார்.
மீண்டும் மீண்டும் சந்திப்பு: ஆனாலும் ஓயாத அதிருப்தி கோஷ்டி தலைவர்கள் இன்று 2-வது நாளாக சரத்பவாரை நேரில் சந்தித்தனர். நேற்றை போலவே இன்றும் செய்தியாளர்களிடம் அதே கருத்தையே ஃபிரபுல் பட்டேல் தெரிவித்தார். அதாவது என்சிபி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினோம்; ஆனால் சரத்பவார் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருக்கிறார் என கூறினர்.
பாஜகவின் ஓரங்க நாடகம்?: இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்களிடம் நாம் பேசிய போது, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் நாடு தழுவிய அளவில் பெரும்பாலான முக்கிய எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவை தொடர்ந்து அதிமுக மட்டும்தான் பிரதான கட்சியாக இருக்கிறது. பல்வேறு கட்சிகளின் அதிருப்தி கோஷ்டிகள், மாநில கட்சிகள், ஜாதி கட்சிகள் என 30 கட்சிகள் இக்கூட்டணியில் உள்ளன. சரத்பவாரை சமாதானப்படுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கொண்டு வந்துவிட்டாலே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை சிதைக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாஜகதான் அதிருப்தி கோஷ்டியை களமிறக்கி இப்படியான நாடகத்தை அரங்கேற்றுகிறது என்கின்றனர்.
இன்று போய் நாளை வா!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications