பாத்திரம் விளக்கி கொண்டிருந்த பெண்.. லவ் லெட்டர் தந்த நபர்.. "பலாத்காரத்துக்கு சமம்".. கோர்ட் அதிரடி
திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தந்த மளிகை கடைக்காரர்
மும்பை: கல்யாணம் ஆன பெண்ணை நோக்கி லவ் லெட்டர் எறிந்துள்ளார் ஒரு மளிகை கடைக்காரர்.. இது தொடர்பான புகார், கோர்ட் வரை சென்றதையடுத்து, சம்பந்தப்பட்ட மளிகைக்கடைக்காரரை மும்பை ஹைகோர்ட் கண்டித்துள்ளது.. திருமணமான பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுப்பது, பாலியல் பலாத்காரத்துக்கு சமம் என்றும் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது.

என்ன நடந்தது?
அக்டோபர் 3, 2011-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.. மும்பையை சேர்ந்தவர் அந்த பெண்.. 45 வயதாகிறது.. கல்யாணம் ஆகிவிட்டது.. ஒருநாள் இந்த பெண் பாத்திரம் விளக்கி கொண்டிருந்தாராம்..
அப்போது அந்த ஏரியாவில் மளிகை கடை வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ண தவாரி என்பவர் அங்கு வந்துள்ளார்.. அவருக்கு 54 வயாகிறது.. இந்த பெண்ணிடம் "ஐ லவ்யூ" என்று சொல்லி, டக்கென ஒரு லவ் லட்டரையும் அந்த பெண்ணை நோக்கி எறிந்துள்ளார்.. இதை பார்த்து அந்த பெண் பதறி போய்விட்டார்..

மளிகை கடைக்காரர்
ஆனால், அந்த லெட்டரை எடுக்காமல் அங்கிருந்து ஓடிவிட்டார்.. அந்த மளிகை கடைக்காரரும் அங்கிருந்து உடனே சென்றுவிட்டார்.. ஆனால், மறுநாள் மறுபடியும் வந்தார்.. இப்போது லெட்டர் எதுவும் தராமல், சம்பந்தப்பட்ட பெண்ணை நோக்கி ஆபாசமாக செய்கைகளை செய்துள்ளார்.. அத்துடன், லெட்டரில் எழுதியிருக்கும் விஷயத்தை பற்றி வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வார்னிங் தந்துள்ளார்.

புகார்
இதற்கு மேல் பொறுக்க முடியாத அந்த பெண், ஸ்டேஷனில் புகார் செய்தார்.. வழக்கு கோர்ட்டுக்கு சென்றது.. இறுதியில் 2018ம் ஆண்டு, ஸ்ரீகிருஷ்ண தவாரிக்கு 2 வருட ஜெயில் தண்டனையும் அளித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும், ரூ35,000 இழப்பீடு உட்பட ரூ.40,000 அபராதமும் விதித்தது... இந்த தண்டனைக்கு பிறகு, தவாரி அப்பீலுக்கு போனார்..

அபாண்டம்
தன்னுடைய மேல்முறையீட்டு மனுவில், "அந்த பெண், தன்னுடைய மளிகை கடைக்கு வந்து, பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு காசு தராமல் போய்விட்டார்.. அந்த காசை கேட்பதற்காக நான் வீட்டுக்கு சென்றதற்கு இப்படியெல்லாம் அபாண்டமாக பாலியல் புகார் சொல்கிறார்" என்று மேல் முறையீடு செய்தார்... இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி விசாரித்தார்.. மளிகை கடைக்காரரின் காரணத்தையும் எடுத்து கொண்டு, அவர் திருந்துவதற்கு ஒரு சான்ஸ் தந்தார்..

அபராதம்
அதன்படி, அவருக்கு ஒரு வருஷ தண்டனை குறைக்கப்பட்டது.. ஆனால், அபராத தொகை ரூ90,000 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.90,000 அபராதத்தில் ரூ.85,000 அந்தப் பெண்ணுக்கு இழப்பீடாகக் கொடுக்கவும் உத்தரவிட்டது.. இறுதியாக மளிகை கடைக்காரரை கோர்ட் கடுமையாக கண்டித்தது.. "பெண்ணின் கண்ணியம் என்பது விலை மதிப்பில்லா நகை போன்றது, அதையெல்லாம் இப்படி இழிவுபடுத்தப்படக் கூடாது..

கண்ணியம்
அந்த பெண்ணுக்கு 45 வயதாகிறது.. காதல் கடிதத்தை கவிதையாக தந்திருந்தாலும், அந்த பெண்ணின், பெண்மையின் கண்ணியத்துக்கு ஏற்படுத்தும் இழுக்குதான் அந்த செயல்.. அதனால், தன் பெண்மைக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டது என்று அந்த பெண் கருதியது சரியே.. அதேசமயம், அந்த பெண்ணை நோக்கி அசிங்கமான செய்கைகளை செய்தது, உதடுகளை குவித்து செய்கை காட்டியது, அந்த பெண் மீது கூழாங்கற்களை எறிந்தது இதெல்லாம் கண்டிக்கத்தக்கது.. கல்யாணமான பெண்ணுக்கு லவ் லெட்டர் கொடுப்பது, பாலியல் பலாத்காரத்துக்கு சமம் " என்று மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications