அஜித் பவார் திடீர் என்று மனதை மாற்றிக்கொண்டார்.. அதனால்தான் ராஜினாமா.. பட்னாவிஸ் பகீர் பேட்டி!

மகாராஷ்டிராவில் அஜித் பவார் பாஜகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கூறியதால்தான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவில் முதல்வர் பட்னாவிஸ் திடீர் ராஜினாமா!| Devendra Fadnavis resigns as the Chief Minister

    மும்பை: மகாராஷ்டிராவில் அஜித் பவார் பாஜகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக கூறியதால்தான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது தேவேந்திர பட்னாவிஸ் செய்துள்ளார்.

    நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமலே தேவேந்திர பாட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார்.

    தவறான கூட்டணி

    தவறான கூட்டணி

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா வைத்திருக்கும் கூட்டணி மிகவும் தவறானது. அவர்களுக்கு கொள்கை ரீதியாக எந்த விதமான நெருக்கமும் கிடையாது. அவர்களுக்கு பாஜகவை ஆட்சி வர செய்ய கூடாது என்பது மட்டுமே நோக்கம். அதனால் அவர்கள் இணைந்துள்ளார்.

    மூன்று டயர்கள்

    மூன்று டயர்கள் இருந்தால்தான் ஆட்டோ ஓடும். ஆனால் அந்த மூன்றும் வெவ்வேறு திசையில் சென்றால் சிக்கலாகும். அப்படித்தான் மகாராஷ்டிராவில் நடக்க போகிறது. நாங்கள் மகாராஷ்டிராவில் நல்ல எதிர்கட்சியாக செயல்படுவோம். நாங்கள் குதிரை பேரம் நடத்த முயற்சிக்கவில்லை.

    முதல் நாள்

    முதல் நாள்

    நாங்கள் முதல் நாளில் இருந்து யாரையும் பிரிக்க முயற்சி செய்யவில்லை. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க போகும் கட்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். எங்களுக்கு அவர்கள் மீது பயம் இல்லை. அவர்கள் தங்களுக்கான குழிகளை தாங்களே தோண்டிக்கொண்டார்கள்.

    அஜித் பவார்

    எங்களுக்கு அஜித் பவார் ஆட்சியை அமைக்க உதவினார். அவரிடம் பேசிவிட்டுதான் ஆட்சி அமைத்தோம். ஆனால் இன்று உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு பின் அவர் முடிவை மாற்றிக்கொண்டார். தன்னால் கூட்டணியில் தொடர முடியாது என்று அஜித் பவார் கூறிவிட்டார்.

    இதுதான் காரணம்

    அவர் அதன்பின் என்னிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரும் ராஜினாமா செய்ததால் எங்களுக்கு இருந்த ஆதரவு போய்விட்டது. இதனால் நானும் தற்போது ராஜினாமா செய்கிறேன், என்று பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+