மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது பர்சனல்.. சொல்ல முடியாது.. பகீர் காரணம் கூறி பாஜகவை அதிர வைத்த அஜித் பவார்!

மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ''பர்சனல்'' காரணத்திற்காக என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ajit Pawar resigns as Maharashtra deputy CM | துணை முதல்வர் பதவியிலிருந்து விலகினார் அஜீத் பவார்

    மும்பை: மகாராஷ்டிராவில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது ''பர்சனல்'' காரணத்திற்காக என்று அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா ஆகிய கட்சிகளின் ஆதரவு இருக்கிறது. இன்று மகாராஷ்டிராவின் துணை முதல்வர் பதவியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பதவி விலகினார்.

    அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலகினார். இதனால் பாஜக தற்போது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.

    மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்! மகாராஷ்டிரா அரசியல் திருப்பம்.. உண்மையில் வென்றது காங்கிரஸ்தான்.. செம ராஜதந்திரம்!

    பதவி விலகல்

    பதவி விலகல்

    இந்த நிலையில் தன்னுடைய பதவி விலகலுக்கு அஜித் பவார் வித்தியாசமான காரணம் கூறி இருக்கிறார். அதில், நான் தனிப்பட்ட பர்சனல் காரணங்களுக்காக பதவி விலகுகிறேன். அதுகுறித்து விளக்கம் அளிக்க முடியாது. என்னால் பாஜக கூட்டணியிலும் தொடர முடியாது.

    நீடிக்க முடியாது

    நீடிக்க முடியாது

    அதனால் நான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. பாஜகவிற்கு அளிக்கும் ஆதரவையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட முடிவு என்று அஜித் பவார் ஆளுநரிடம் பதவி விலகும் போது தெரிவித்து இருக்கிறார்.

    தனிப்பட்ட பிரச்சனை

    தனிப்பட்ட பிரச்சனை

    அதேபோல் தேவேந்திர பட்னாவிஸ் உடன் பேசிய போதும், எனக்கு சில தனிப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் ஆதரவை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அஜித் பவார் தனக்கு எவ்வளவு ஆதரவு இருந்தது. ஏன் இப்படி மனம் மாறினார் என்பது குறித்து பட்னாவிஸிடம் விளக்கம் அளிக்கவில்லை.

    போனை எடுக்கவில்லை

    போனை எடுக்கவில்லை

    இந்த பதவி விலகலுக்கு பின் பாஜக தலைவர்கள் யாருடைய போனையும் அஜித் பவார் எடுக்கவில்லை என்கிறார்கள். பாஜக தலைவர்கள் யாரையும் அஜித் பவார் சந்திக்கவில்லை. இதனால் அஜித் பவாரின் திடீர் மனமாற்றத்திற்கு வேறு காரணம் இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Maharashtra: Ajit Pawar quoted personal reason for resignation fro Dy CM post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X