நிற்காத மோடி அலை.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணிதான் அரியணை ஏறும்.. டுடேஸ் சாணக்யா சர்வே
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 152-160 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதேபோல் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 130-138 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மற்றவை 6-8 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற்றது. ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் வந்த மோதலில் சிவசேனாவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்து, மகா விகாஸ் அகாடி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியது. இதையடுத்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், மகா விகாஸ் அகாடி ஆட்சி செய்தது.

ஆனால் அதன்பின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து ஆட்சி கவிழ்ந்தது. அதோடு தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் உடைந்தது. இவர்கள் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவசேனா ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.
மெஜாரிட்டி: மகாராஷ்டிரா சட்டசபையின் 288 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சட்டசபை தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்தது. அங்கே மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
கணிப்பு: இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டு உள்ள கணிப்பில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 152-160 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்துள்ளன. அதேபோல் எதிர்க்கட்சிகளின் காங்கிரஸ் - சிவசேனா உத்தவ் தாக்கரே - தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூட்டணி 130-138 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. மற்றவை 6-8 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அங்கே மெஜாரிட்டி பெற 145 இடங்கள் போதும். அப்படி இருக்க பாஜகவின் என்டிஏ கூட்டணி 7 இடங்களை கூடுதலாக பிடித்து ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா தேர்தல்: மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 149 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (ஷிண்டே பிரிவு) மற்றும் என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவை முறையே 81 மற்றும் 59 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.
எதிர்க்கட்சிகள் தரப்பில், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே) மற்றும் என்சிபி (சரத் பவார் பிரிவு) முறையே 95 மற்றும் 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மேலும், 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) 17 இடங்களில் போட்டியிடுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications