மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்ட ரீதியாக என்ன வழி இருக்கிறது.. சிவசேனாவை காலி செய்ய பிளான் போடும் பாஜக.. ஆளுநருடன் ஆலோசனை!

மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்திக்கும் பாஜக.. அடுத்தடுத்த நகர்வுகளால் பரபரக்கும் அரசியல் களம்

    மும்பை: மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர்.

    மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. முதல்வர் பதவி வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. மஹாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.

    சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

    ஆஹா.. சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் அடுத்ததாக இந்த வசதியும் இனி வரப்போகுது!ஆஹா.. சென்னை மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் அடுத்ததாக இந்த வசதியும் இனி வரப்போகுது!

    பாஜக தலைவர்

    பாஜக தலைவர்

    இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங்கை சந்தித்தனர். சுமார் 1 மணி நேரம் இவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். முக்கியமான எம்எல்ஏக்கள் மட்டுமே இந்த ஆலோசனையில் இடம்பெற்று இருந்தனர்.

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    இந்த ஆலோசனையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் இதில் என்ன விவாதம் செய்தார்கள் என்பதை அம்மாநில பாஜக கட்சி ரகசியமாக வைத்து இருக்கிறது. ஆட்சியை பிடிப்பது குறித்து முக்கிய திட்டங்களை இவர்கள் ஆலோசனை செய்தார்கள் என்பது மட்டுமே தெரிய வருகிறது.

    சந்திரகாந்த் பாட்டீல்

    சந்திரகாந்த் பாட்டீல்

    இது தொடர்பாக சந்திரகாந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், நாங்கள் முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தோம். ஆனால் அதுகுறித்து பேச முடியாது. சட்ட ரீதியாக என்ன வழி இருக்கிறது என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம். எங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது.

    தேர்தல்

    தேர்தல்

    அதனால்தான் நாங்கள் தேர்தலில் பெரிய வெற்றியை பதிவு செய்து இருக்கிறோம். அதனால் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி. நாங்கள் சட்ட ரீதியாக சில விஷயங்கள் விவாதித்துள்ளோம். விரைவில் ஆட்சி அமைப்போம், மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும், என்று கூறி இருக்கிறார்.

    English summary
    Maharashtra: BJP leaders met Governor to find the legal solutions against Shiv Sena in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X