ஒரு பக்கம் கேஸ்.. இன்னொரு பக்கம் சரத் பவாரை சந்திக்கும் பாஜகவின் முக்கிய புள்ளி.. யாருக்கு தூது?

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக கட்சியின் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் காக்கடே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக கட்சியின் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் காக்கடே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக கட்சி இன்னும் 24 மணி நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான அவசர விசாரணை இன்று காலை நடக்கிறது.

உச்ச நீதிமன்ற அரசியலில் அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் நடந்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.

திடீர் சந்திப்பு

திடீர் சந்திப்பு

இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் எம்பி சஞ்சய் காக்கடே சரத் பவாரை நேரில் சந்தித்துள்ளார். சரத் பவாரின் வீட்டிற்கு என்ற சஞ்சய் காக்கடே அவருடன் சந்திப்பு நடத்தினார்கள். இவர்கள் இருவரும் 20 நிமிடமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையை

விசாரணையை

ஒரு பக்கம் வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த சந்திப்பு நடந்துள்ளது. தற்போது எம்பி சஞ்சய் காக்கடே ராஜ்ய சபா எம்பியாக இருக்கிறார். சுயேட்சையாக பயணத்தை தொடங்கியவர் தற்போது பாஜகவில் முக்கிய தலைவராக உருவெடுத்து இருக்கிறார்.

பணம்

பணம்

இவரின் திடீர் சந்திப்பிற்கு காரணம் என்ன? சரத் பவாரும் இவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. இவர் பல விஷயங்கள் வைரலான அரசியல்வாதி. இவரிடம் சில நாட்களுக்கு முன் வெளியான பிஎம்டபிள்யூ சொகுசு கார் இருக்கிறது. பல கோடி சொத்து மதிப்பு கொண்ட அரசியல்வாதி இவர்.

தூது

தூது

ரியல் எஸ்டேட் துறையில் பல வருடங்களாக இவர் கொடி கட்டி பறந்து வருகிறார். இந்த நிலையில்தான் அவர் சரத் பவாரை சந்தித்து இருக்கிறார். பாஜக கூட்டணியுடன் மொத்தமாக இணையும் வகையில் அமித் ஷாவோ அல்லது சமாதானம் பேசும் வகையில் அஜித் பவாரோ இவரை தூது அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+