மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படி நடந்தது? மோடி வந்து பிரச்சாரம் செய்தார்.. ஆனாலும் தோல்வி.. விளக்கம் கேட்கும் அமித் ஷா!

பாஜகவை சேர்ந்த ஸ்டார் வேட்பாளர் பங்கஜ் முண்டே தேர்தல் தோல்வியை அடுத்து பாஜக தலைமை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Election results 2019 | மகாராஷ்டிரா, ஹரியானாவில் சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா

    மும்பை: பாஜகவை சேர்ந்த ஸ்டார் வேட்பாளர் பங்கஜ் முண்டே தேர்தல் தோல்வியை அடுத்து பாஜக தலைமை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது.

    காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது.

    சுயேட்சைகளை வளைக்க திட்டம்.. ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு.. அமித் ஷா மாஸ்டர் பிளான்!சுயேட்சைகளை வளைக்க திட்டம்.. ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க பாஜக முடிவு.. அமித் ஷா மாஸ்டர் பிளான்!

    தோல்வி அடைந்தார்

    தோல்வி அடைந்தார்

    இந்த நிலையில் பாஜகவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார் வேட்பாளர் பங்கஜ் முண்டே, மகாராஷ்டிரா பார்லி தொகுதியில், தோல்வியை தழுவினார். அதிலும் இவர் தன்னுடைய நெருங்கிய உறவினரான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனஞ்ஜெய் முண்டேவிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உறவினர்

    உறவினர்

    பங்கஜ் முண்டே கடந்த பாஜக ஆட்சியில் மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தார். இவர் மறைந்த மூத்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள் ஆவார். பாஜகவில் இருந்து பிரிந்து தேசியாவாத காங்கிரஸ் கட்சியில் இவரின் உறவினர் தனஞ்ஜெய் முண்டே கடந்த வருடம் இணைந்தார்.

    மோசமான தோல்வி

    மோசமான தோல்வி

    தற்போது அதே உறவினர் தனஞ்ஜெய் முண்டேவிடம்தான் பார்லி தொகுதியில் பங்கஜ் முண்டே தோல்வி அடைந்துள்ளார். இந்த தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத பங்கஜ் முண்டே, எனக்கு மனது வலிக்கிறது. ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன், என்று வருத்தத்துடன் கூறினார்.

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    இவர் பிரச்சாரம் செய்த நேரத்தில் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கினார். அதேபோல் பங்கஜ் முண்டேவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து அவரின் தொகுதியிலேயே பிரச்சாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவர் தோல்வி அடைந்தது எப்படி என்று பாஜகவினர் குழப்பம் அடைத்துள்ளனர். இது தொடர்பாக பாஜக தேசிய தலைமை பங்கஜ் முண்டேவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

    English summary
    Maharashtra: BJP national chief asking explanation from Pankaja Munde for her loss in her constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X