மகாராஷ்டிர முதல்வர் மனைவியின் முரட்டு பிடிவாதம்.. சர்ச்சை செல்பியால் பரபரப்பு!

முதலமைச்சர் மனைவி அம்ருதாவின் ஆபத்தான செல்பிகள் வைரலாகி வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிர முதல்வர் மனைவி எடுத்த செல்பியால் பரபரப்பு!-வீடியோ

    மும்பை: செல்பி மோகம் யாரை விட்டது? முதலமைச்சர் மனைவியையும் தொத்திக் கொண்டு, கூட இருந்த செக்யூரிட்டிகளை எல்லாம் அலறவிட்டு ஓட விட்டுள்ளது.

    மும்பை கடல் பகுதியில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இதனை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

    தன்னை மறந்த அம்ருதா

    தன்னை மறந்த அம்ருதா

    இந்த விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் தன் மனைவி அம்ருதாவை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். சொகுசு கப்பலின் அழகை கண்டதும் தன்னையே மறந்தார் அம்ருதா. அதனால் கப்பலில் நின்று கொண்டு, விதவிதமாக தன் செல்போனில் செல்பி எடுத்து கொண்டார். அப்போதும் அவருக்கு அந்த கப்பலின் மீது ஆசை தீரவே இல்லை.

    [அடேய் இதுக்குள்ள போய் என்னடா பன்ற... இதுஎன்ன சரக்காமர விளையாட்டுனு நெனச்சியா! ]

    ஆபத்தான பகுதிகள்

    ஆபத்தான பகுதிகள்

    அதனால் உற்சாகம் அதிகமாகி ஒரு கட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான கார்னர் பகுதிக்கு போய் நின்று கொண்டார். இதை பார்த்ததும் உடன் இருந்த பாதுகாவலர்களுக்கு தூக்கி வாரி போட்டது. அதிர்ந்த போலீசாரும் அம்ருதாவை அங்கெல்லாம் போக வேண்டாம் என்றும், ஆபத்தான பகுதி என்றும் சொல்லி பார்த்தனர்.. தடுத்து பார்த்தனர்... அம்ருதா கேட்கவே இல்லை.

    கப்பலின் அடிப்பகுதி

    கப்பலின் அடிப்பகுதி

    கடல் அலைகள் உயர்ந்து செல்லும் கப்பலின் விளிம்பு பகுதியில் ஒரே தாவாக தாவி குதித்து அங்கு போய் உட்கார்ந்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்தார். கடல் அலைகள் உரசும் கப்பலின் அடிப்பகுதியிலும் நின்று கொண்டும் செல்பி எடுத்து தள்ளினார்.

    நடவடிக்கை எடுப்பார்களா?

    இப்படி அம்ருதா உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. முதலமைச்சரின் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்களா என்றும் கருத்துக்கள் இணையத்தில் விழுந்து வருகின்றன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+