எந்த பஞ்சாயத்துமே இல்லீங்க.. ஒன்னாவே எல்லா தேர்தலையும் சந்திப்போம்..திடீரென ராசியான பாஜக-சிவசேனா!
மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக இடையே எந்த முரண்பாடும் இல்லை; இரு கட்சிகளும் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் இணைந்தே போட்டியிடும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை உடைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்களை ஒரு அணியாக்கி அதனுடன் இணைந்து பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே முதல்வர், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக இருந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தலைவர்கள் மீது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைவர்கள் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பாஜக தங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது எனவும் விமர்சித்திருந்தனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது; இதனால் தங்களுடைய சிவசேனாவுக்கு சொற்ப இடங்களைத்தான் தரப் போவதாகவும் அக்கட்சி எம்.பிக்கள் பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று இரவு சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.
இச்சந்திப்புக்குப் பின், மகாராஷ்டிராவில் சிவசேனா- பாஜக ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. அதனையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம். பாஜக-சிவசேனாவைப் பொறுத்தவரையில் இனி வரும் காலங்கள் அனைத்திலும் அனைத்து தேர்தல்களிலும் இரு கட்சிகளுமே இணைந்தே போட்டியிடும்; இரு கட்சிகளிடையே எந்த மன வருத்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications