ஆபத்தான இடத்திற்கு நான் போகலை.. தப்புன்னா மன்னித்து விடுங்கள்.. ஸாரி கேட்ட முதல்வர் மனைவி
ஆபத்தான செல்ஃபிகளை எடுத்த அம்ருதா பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
Recommended Video

மும்பை: போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, சொகுசு கப்பலில் ஆபத்தான செல்ஃபிகளை எடுத்த மஹாராஷ்டிர மாநில முதல்வர் மனைவி அம்ருதா, தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
மும்பை கடல் பகுதியில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டது. இந்த விழாவுக்கு வந்திருந்த தேவேந்திர பட்னாவிஸ் தன் மனைவி அம்ருதா சொகுசு கப்பலின் அழகை கண்டதும் தன்னையே மறந்து செல்பிகளாக எடுத்து தள்ளினார்.

தடை செய்த பகுதி
உற்சாகம் அதிகமாகி ஒரு கட்டத்தில் கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான கார்னர் பகுதிக்கு போய் நின்று அங்கேயும் செல்பி எடுத்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு போலீசாருக்கு தூக்கி வாரி போட்டது. அதனால் அம்ருதாவை அங்கெல்லாம் போக வேண்டாம், ஆபத்தான பகுதி என்று சொன்னார்கள். ஆனால் அம்ருதா கேட்கவே இல்லை.

வைரல் போட்டோக்கள்
கடலலை உரசும் கப்பலின் விளிம்பு பகுதிக்கு சென்று செல்பி எடுத்து தள்ளினார். இப்படி அம்ருதா உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்பி எடுத்த சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

அம்ருதாவுக்கு கண்டனம்
முதலமைச்சரின் மனைவி மீது நடவடிக்கை எடுப்பார்களா என்றும் கருத்துக்கள் இணையத்தில் பதிந்து வந்தன. இந்நிலையில் தன்னுடைய செயலுக்கு அம்ருதா மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக அம்ருதா பேட்டியும் அளித்துள்ளார்.

மன்னிப்பு கேட்கிறேன்
அதில், "நான் செல்ஃபி எடுத்த பகுதி ஆபத்து இல்லாத இடம்தான். ஏனென்றால் நான் நின்று கொண்டிருப்பதற்கு கீழே இன்னும் 2 படிக்கட்டுகள் இருந்தன. ஆனால் நான் ஆபத்தில் நின்று செல்ஃபி எடுத்ததாக மற்றவர்கள் நினைத்து விட்டார்கள். என்றாலும் இதில் நான் தவறு செய்திருப்பதாக யாராவது நினைத்தால், அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
