டிராபிக்ஜாம் தான் டைவர்சுக்கு காரணம்..போட்டு தாக்கிய முன்னாள் முதல்வரின் மனைவி.. கலாய்க்காதீங்கப்பா!
மும்பை : 3 சதவீத விவாகரத்துகள் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே ஏற்படுகிறது என மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா கூறியுள்ளது ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பையில் எப்போதும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படும். தினந்தோறும் சாலை நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகளின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வாகனங்களின் எண்ணிக்கை மும்பையில் அதிகரித்து வரும் நிலையில் காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது. மேலும் மோசமான சாலைகள் காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

முன்னாள் முதல்வரின் மனைவி
இந்த நிலையில்தான் மும்பையில் நடக்கும் விவாகரத்து வழக்குகளில் 3 சதவீத வழக்குகள் சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படுகிறது என மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரின் மனைவி கூறியிருப்பது சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாகி வருகிறது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்ருதா, மும்பையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளதாகவும், இதன் காரணமாக விவாகரத்து வரை செல்லும் நிலை உள்ளது எனக் கூறினார்.

போக்குவரத்து நெரிசல்
மும்பையில் தற்போது நடைபெற்று வரும் விவாகரத்து வழக்குகளில் 3 சதவீத வழக்குகள் போக்குவரத்து நெரிசல் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாகவும் சாலைகளில் உள்ள மோசமான பலன்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால் தானும் தனிப்பட்ட முறையில் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி என்பதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தான் ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன் எனவும் பேசினார்.

வியக்கத்தது என விமர்சனம்
மோசமான சாலைகளில் உள்ள பள்ளங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மக்களை எவ்வாறு தொந்தரவு செய்யும் என்பதைத்தான் தனிப்பட்ட முறையில் அனுபவித்து உள்ளதாகவும் அம்ருதா பட்பனாவிஸ் பேசியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அம்ருதாவின் பேச்சு வியக்கத்தக்கதாக உள்ளது என மும்பை மேயர் கூறியுள்ளார். அம்ருதா பட்னாவிஸின் பேச்சை விமர்சித்த மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், இந்த அறிக்கை "வியக்கத்தக்கது" என்று கூறினார். "போக்குவரத்து விவாகரத்துக்கு இட்டுச் செல்கிறது என்ற அவரது குற்றச்சாட்டு வியக்க வைக்கிறது, விவாகரத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் இதை நான் முதன்முறையாகக் கேட்கிறேன்," என்று பெட்னேகர் கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறந்த லாஜிக் விருது
அம்ருதாவின் பெயரைக் குறிப்பிடாமல், சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி ட்வீட் செய்துள்ளார் அதில், "3% மும்பைவாசிகள் சாலை போக்குவரத்து காரணமாக விவாகரத்து செய்கிறார்கள் என்று கூறும் பெண்ணுக்கு இந்த நாளின் சிறந்த (IL) லாஜிக் விருது வழங்கப்படுகிறது. தயவு செய்து பிரேக் போடுவதை விட விடுமுறை எடுங்கள்..," எனவும், பெங்களூரு குடும்பங்கள் தயவு செய்து இதைப் படிப்பதைத் தவிர்க்கவும், அது உங்கள் திருமணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் அம்ருதாவின் இந்த பேச்சை சமூக வலைதலங்களிலும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications