‛‛உடலில் ஒட்டுத்துணி கூட இல்லை’’.. நிர்வாணமாக மருத்துவமனையை சுற்றி வந்த டாக்டரால் பரபரப்பு
மும்பை: உடலில் ஆடை ஏதுமின்றி அரசு மருத்துவமனையை டாக்டர் ஒருவர் நிர்வாணமாக சுற்றி வந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் பிட்கின் எனும் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை அவுரங்காபாத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தினமும் இந்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் தான் மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் இரவு நேரத்தில் ஆடைகள் ஏதும் அணியாமல் மருத்துவமனையில் வலம் வந்துள்ளார். அவர் மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரத்தில் நிர்வாணமாக சுற்றியுள்ளார். டாக்டரின் இந்த செயல் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த வீடியோ இப்போது வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் நிர்வாணமாக மருத்துவமனை வளாகம் மற்றும் கழிவறை பகுதியில் வலம் வருகிறார். இந்நிலையில் தான் அந்த டாக்டர் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
நிர்வாணமாக சுற்றி வந்த டாக்டருக்கு மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர் மதுபானம் குடிப்பதோடு, போதைப்பொருளை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த சம்பவம் நடந்தபோதும் கூட அவர் போதையில் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றி சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தின் சுகாதாரத்துறை சேவை பிரிவின் தலைவர் தயானந்த் மோடிபாவ்ளிக்கு புகார் சென்றது. இதையடுத்து அவர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை முடிவடைந்த பிறகு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications