பாஜகவை கடுப்பேற்றும் ஏக்நாத் ஷிண்டே- மும்பை ஆலோசனைக் கூட்டத்தை திடீரென ரத்து செய்ததால் பரபரப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பது, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற இருந்த மகாயுதி ஆலோசனைக் கூட்டத்தில் திடீரென சிவசேனா தலைவரும் இடைக்கால முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க முடியாது என தெரிவித்திருப்பது பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், பாஜக மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லிக்கு விரைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 5-ந் தேதி பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான துறைகள் குறித்து மகாயுதி கூட்டணியில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனால் மகாயுதி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது; உடல்நலன் சரியில்லை என இடைக்கால முதல்வரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துவிட்டார். இதனால் பாஜக, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏக்நாத் ஷிண்டேவைப் பொறுத்தவரையில் முதல்வர் பதவியை முதலில் விட்டுத் தர மறுத்தார். இதில் பிரதமர் மோடி தலையிட்டதால் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஏக்நாத் ஷிண்டே.
ஆனால் மகன் ஶ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியுடன் உள்துறை ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் ஷிண்டே உறுதியாக நிற்கிறார். துணை முதல்வர் பதவியை தர முன்வரும் பாஜக, உள்துறையை தர ஒப்புக் கொள்ள மறுக்கிறது. இதனால் ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தை ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் திடீரென இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். மகாராஷ்டிரா புதிய ஆட்சி அமைவதில் நீடிக்கும் முட்டுக்கட்டை தொடர்பாக பாஜக மேலிடத் தலைவர்களுடன் அஜித் பவார் ஆலோசனை நடத்துவதார் எனவும் கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications