கடைசி நேரத்தில் காலைவாரிய 'பவார்'.. 2019 ல் தேவேந்திர பட்னாவிஸ் எடுத்த சபதம் நிறைவேறுகிறது?
மும்பை: மகாராஷ்டிராவில் 2019 சட்டசபை தேர்தலுக்கு பின்பு பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அஜித் பவாரின் ஆதரவுடன் 2019 நவம்பர் 8-ம் தேதி பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அப்போது 2019ம் ஆண்டு ராஜினாமா செய்யும் போது சபதம் எடுத்த தேவேந்திர பட்னாவிஸ், மீண்டும் முதல்வராவேன் என்றார். அவரது சபதம் நிறைவேறப்போகிறது.
அரசியலில் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதே நாம் எதிரி தான் தீர்மானிக்கிறான் என்று சொல்வார்கள்.. அது மறுக்க முடியாத உண்மை.. அதேபோல் என்ன விமர்சனங்கள் வந்தாலும் இறுதியில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள், யார் அதிகாரத்திற்கு வருகிறார்கள் என்பதை தான் இந்த உலக பார்க்கிறது. இவர் நல்லவர், அவர் நல்லவர் என்று பார்ப்பதே இல்லை.. அரசியல்வெற்றி தான் இறுதி இலக்கு. அந்த வெற்றி எப்படி வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு மக்களும் முக்கிய காரணம் ஆகும். சரி விஷயத்திற்கு வருவோம்.

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 105 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன. இதில் சிவசேனா முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு பாஜகவுடன் சேர மறுத்தது. காங்கிரஸ் இந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டு உத்தவ் தாக்ரேவை முதல்வராக்க முடிவு செய்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவை ஆதரிக்க முடிவு செய்தது.
இதனிடையே அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அப்படியே பாஜகவை ஆதரித்தனர். இதனால் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சியமைப்பது உறுதியானது. அதேநேரம் பொதுவாக எந்த கட்சிக்கு அதிக பெரும்பான்மை உள்ளதோ, அந்த கட்சியைத்தான் ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார். அப்படித்தான் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, பாஜக ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி கடந்த 2019 நவம்பர் 8-ம் தேதி பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்கள்.
ஆனால் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்க மறுத்தது. இதன்காரணமாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார். இதுபற்றி தனியார் தொலைக்காட்சிக்கு ஒரு முறை தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில். பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா விலகிய பிறகு எங்களோடு கூட்டணி அமைக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்தது. அந்த கட்சியோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடனும் ஆலோசித்துதான் முடிவு செய்தோம். இதன்படி நான் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றோம்.
சரத் பவாரின் ஒப்புதலுடன் ஆட்சி அமைத்தோம். ஆனால் தேசியவாத காங்கிரஸ் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டது. நாங்கள் இரண்டு முறை ஏமாற்றப்பட்டோம்" என்றார். இதனிடையே அந்த சமயத்தில் அஜித்பவார் திடீரென காலைவாரிவிட்டு வழக்கம் போல் சரத்பவாருடன் இணைந்து கொண்டார். இதனால் தேவேந்திர பட்னாவிஸால் முதல்வராக முடியாமல் போனது. அப்போது சபதம் எடுத்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவேன் என்றார்.
அவர் எதிர்பார்த்தது போலவே இப்போது மகாராஷ்டிராவில் முதல்வராக போகிறார். ஏனெனில் பாஜக இந்த முறை 129 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளது . மெஜாரிடிக்கு வெறும் 16 இடங்கள் மட்டுமே கூடுதலாக தேவை. இதுதவிர பாஜகவின் கூட்டணி கட்சியான ஷிண்டேவின் சிவசேனா 47 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக 217 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் ஆவது உறுதி என்கிறார்கள் பாஜகவினர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications