மகாராஷ்டிராவில் பாஜக வெல்லும்.. ஆனால் இதர கட்சிகள் அதிகம் வென்றால் காங்கிரசுக்கு சான்ஸ்?- போல் டைரி
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த இரண்டரை வருடங்களாக பாஜக, சிவசேனா(ஷிண்டே அணி), என்சிபி (அஜித் பவார்) கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இந்த சட்டசபையின் பதவி காலம் வரும் நவம்பர் 26-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளளதால் மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ந் தேதி இன்று) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய ஆளும் 'மகாயுதி' கூட்டணி யும், காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியும் நேருக்கு நேர் போட்டியிட்டன.

இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அதேநேரம் இந்தியா கூட்டணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இந்தநிலையில் 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடந்தது.
காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 9 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரத்து 119 வாக்காளர்களில் பலரும் காலை முதலே ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 1 லட்சத்து 186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தலில் மொத்தம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 996 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அப்போது தான் யார் வென்றார்கள் என்பது தெரியவரும்.
எனினும் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை தான் வெளிவரும் என்றாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளியாகின. இதன் படி வெளியான பெரும்பாலான கணிப்புகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களை பிடித்து வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் போல் டைரி என்ற எக்ஸிட் போல் முடிவுகளின் படி, பாஜக கூட்டணி 122 முதல் 186 இடங்களில் வெல்லும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 69 முதல் 121 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 12 முதல் 29 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் போல் டைரி எக்ஸிட் போல் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மகாயுவதி அணி (பாஜக கூட்டணி) பாஜக 77 முதல் 108 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 27 முதல் 50 இடங்களிலும், என்சிபி அஜித் பவார் அணி 18 முதல் 28 இடங்களில் வெல்லம் என கூறப்பட்டுள்ளது. மகாவிகாஷ் அகாடி அணியில் (காங்கிரஸ் கூட்டணி), காங்கிரஸ் கூட்டணி 28 முதல் 47 இடங்களிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே) 16 முதல் 35 இடங்களிலும், என்சிபி (சரத்பவார் அணி) 25 முதல் 39 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
போல் டைரி கணிப்பின் படி, மகாராஷ்டிராவில் கட்சிகளின் வாக்கு சதவீதம் எப்படி இருக்கும்: பாஜக 23.78 சதவீதம், சிவசேனா (ஷிண்டே) 13.52 சதவீதம். என்சிபி (அஜித் பவார்) 6.79 சதவீதம் பெறும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 16.42 சதவீதம், சிவேசனா (உத்தவ் தாக்கரே) 12.37 சதவீதம். என்சிபி (சரத்பவார்) 11.22 சதவீதம் வாக்குகளை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணி 44.09 சதவீதம் (வரையிலும் )வாக்குகளும், இந்தியா கூட்டணி 40.01 சதவீதம் (வரையிலும் )வாக்குகளும், மற்ற கட்சிகள் 15.99 சதவீதம் (வரையிலும்) வாக்குகளும் பெறும் என போல் டைரி கணித்துள்ளது.
போல் டைரி கணிப்பின்படி அதிகபட்சமாக 121 இடங்களை தாண்டி காங்கிரஸ் கூட்டணி வென்று இதர கட்சிகளுடன் ஆட்சியை பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.. இங்கு கடும் போட்டியாகுமா அல்லது பாஜக எளிதாக வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications