”இந்தியா” கூட்டணி: இணைவது பற்றி இன்னமும் முடிவெடுக்கலையே.. திடீரென மகாராஷ்டிராவிலிருந்து வந்த குரல்
மும்பை: "இந்தியா" கூட்டணி கூட்டம் இன்று மும்பையில் தொடங்கும் நிலையில் மகாராஷ்டிரா விவசாயிகள் கட்சி திடீரென இன்னமும் அணியில் இணைவது பற்றி முடிவெடுக்கவில்லையே என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
"இந்தியா" கூட்டணி இன்றும் நாளையும் மும்பையில் ஆலோசனை நடத்துகிறது. இன்று இரவு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தரும் இரவு விருந்துடன் இந்த கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.

"இந்தியா" கூட்டணியின் பொதுசெயல்திட்டத்தை உருவாக்கும் குழு, ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்புக் குழு, தொகுதி பங்கீடு என பல்வேறு அம்சங்கள் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 28 கட்சிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 26 அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன.
இக்கூட்டணியில் மகாராஷ்டிராவின் விவசாயிகள் கட்சியான -SSS இணையும் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவரும் விவசாய சங்கத் தலைவருமான ராஜூ ஷெட்டி, இன்னமும் "இந்தியா" கூட்டணி யில் இணைவதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்கிறார்.
ராஜூ ஷெட்டியின் கட்சி கடந்த 2017-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தது. பின்னர் காங்கிரஸ்- என்சிபி- சிவசேனாவின் கூட்டணியில் இணைந்தது. தற்போது "இந்தியா" கூட்டணிக்கு வருமா? அல்லது மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புமா? என்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications