கல்லூரிகளுக்கு நிதி, நலத் திட்டங்கள்..மகாராஷ்டிரா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் 244 அறிவிப்புகள்!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில நிமிடங்கள் முன்னர் வரை அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு ஒரே நாளில் 244 அறிவிப்புகள், உத்தரவுகளை வெளியிட்டிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் தேதியை சில நாட்களுக்கு முன்னர் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இம்மாநிலத்தில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள். அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.ஏ

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணியில் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணிக்கு மராத்தா இடஒதுக்கீடு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. வெங்காய ஏற்றுமதி கட்டுப்பாடுகளில்பெரும் நெருக்கடியை விவசாயிகள் சந்தித்த நிலையில் மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் அதனை தளர்த்தியது. மேலும் பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மலைபோல நம்பி இருக்கிறது மகாராஷ்டிரா மாநில பாஜக கூட்டணி அரசு.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர் வரை ஏராளமான அறிவிப்புகள், அனுமதி உத்தரவுகளை மகாராஷ்டிரா அரசு வழங்கி இருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய நாளில் மட்டும் மொத்தம் 244 அறிவிப்புகளை பாஜக கூட்டணி அரசு அரசிதழ்களில் வெளியிட்டுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் மருத்துவ கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கான நிதி உதவி, கிராமங்கள்- நகரங்களுக்கான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு, வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு, தலித் இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான குழுக்கள் நியமனம் உள்ளிட்டவை இந்த உத்தரவுகளில் அடங்கும். பிரதமர் வீட்டு வசதித் திட்டம் 2.0 செயல்படுத்துதலும் இந்த உத்தரவில் முக்கியமானவையாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் மகாராஷ்டிரா மாநில அரசு இந்த உத்தரவுகளை வெளியிட்டுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications