ஆண்களுக்கு போன மகளிர் உதவி தொகை.. அதுவும் 14,000 பேருக்கு.. அம்பலமான மிக பெரிய மோசடி!
மும்பை: தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த மகளிருக்கு இப்போது மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதுபோல உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்ட இதுபோன்ற உதவித்தொகை திட்டத்தில் சுமார் 12000க்கும் மேற்பட்ட ஆண்கள் பணத்தை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமானது உரிமை தொகை. பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலிலேயே இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

உதவித்தொகை
தமிழகத்தை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதேபோன்ற மகளிர் உதவித் தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராவில் ஆளும் என்டிஏ அரசு "முக்கியமந்திரி மாஜி லாட்கி பாஹின் யோஜனா" என்ற பெயரில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் பெண்களுக்கு ஒழ்வொரு மாதமும் ரூ.1500 வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ₹2.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த 21 முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,500 வழங்குகிறது. மகாராஷ்டிராவில் கடந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆண்களுக்கு போன பெண்கள் உதவி தொகை
அப்போது முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்கு அங்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மாதம் தோறும் உதவி தொகை கிடைப்பதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது நடந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி எளிதாக வெல்ல இதுவே பிரதான காரணமாக இருந்தது.
இதற்கிடையே இந்த திட்டம் குறித்து கேட்கப்பட்ட ஆர்டிஐ கேள்விக்கு, சுமார் 12,431 ஆண்கள் இதில் மாதம் மாதம் பணம் பெற்று வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் உதவித்தொகை செயல்படுத்தப்படும் நிலையில், அவர்களிடம் ஆர்டிஐ கேள்வி எழுப்பப்பட்டது. அதில் தான் 12,431 ஆண்களுக்கு இந்த தொகை வழங்கப்படுவது தெரிய வந்துள்ளது.
எத்தனை பேர்
உதவி தொகை பெற்று வந்தவர்களில் தகுதியற்றவர்கள் என அடையாளம் காணப்பட்ட 77,980 பெண்களுடன் சேர்த்து, இந்த 12,431 ஆண்களும் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த 12,431 ஆண்களுக்கும் 77,980 பெண்களுக்கும் கடந்த 12 முதல் 13 மாதங்களாக மாதம் ₹1,500 பெற்றுள்ளனர். ஆண்களுக்கு சுமார் ₹24.24 கோடியும், பெண்களுக்கு சுமார் ₹140.28 கோடியும் தவறாக அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக ₹164.52 கோடிக்கு மேலாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் சொல்வது என்ன
இத்திட்டத்தில் அரசு ஊழியர்கள் தகுதி பெற மாட்டார்கள். இருப்பினும், 2,400 அரசு ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ஏமாற்றி பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு திட்டத்தில் ஏமாற்றி, தவறாக பணம் பெற்றவர்களிடம் இருந்து, அதை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து அதிகாரிகல் ஆலோசனை செய்து செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications