ஆபாச படங்களுக்கு அடிமையான 14 வயது சிறுவன்.. விஷம் வைத்து கொன்ற தந்தை.. நமது நாட்டில்தான்.. பகீர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆபாசப் படம் பார்த்ததற்காகத் தந்தை ஒருவரே தனது மகனுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் நகரில் 14 வயது சிறுவன் ஆபாசப் படங்களுக்கு அடிமையாகி உள்ளார். அடிக்கடி ஆபாசப் படங்களைப் பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதை அவரது தந்தை பார்த்துள்ளார்.

 Maharashtra Man Poisons his own Teenage Son For Watching inappropriate videos

ஆனால், டீன் ஏஜ் மகனிடம் இது குறித்துப் புரிய வைப்பதற்குப் பதிலாக ஆத்திரம் கொண்ட அந்த தந்தை சொந்த மகனுக்கே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது: இது தொடர்பாக விஜய் பட்டு என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தனது டீனேஜ் மகன் தனது செல்போனில் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகப் பள்ளியில் இருந்து பல புகார்களை வந்ததால் அவர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது மகனின் நடத்தை குறித்து பள்ளியில் இருந்து பலமுறை புகார் வந்ததால் ஆத்திரமடைந்த தந்தை தனது 14 வயது மகனுக்கு விஷம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் அதிகாரி கூறுகையில், "கொலை குற்றச்சாட்டிற்கு ஆளான நபர் சோலாப்பூர் நகரில் தையல்காரராக இருக்கிறார். அவர் அங்கே தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இங்கே வசித்து வந்துள்ளார். அவரது குடும்பத்தில் யாருக்கும் இது குறித்துத் தெரியாது.

பதறிய தாய்: தங்கள் மகன் காணாமல் போனதால் தாய் பதறி உள்ளார். இதையடுத்து இது குறித்து அவர் போலீசில் புகாரும் அளித்துள்ளார். மனைவிக்கும் சரி போலீசாருக்கும் சரி தந்தையே இந்த மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்று தெரியாது. ஏனென்றால் முதலில் விஜய்யும் தனது மகன் காணாமல் போனது குறித்து சோகமாக இருப்பது போலவே காட்டிக் கொண்டார். இதனால் எங்களுக்கு முதலில் அவர் மீது சந்தேகம் வரவில்லை" என்றார்.

சிறுவனின் தாயார் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சிறுமியின் சடலத்தை வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் இருந்து கண்டுபிடித்துள்ளனர். மேலும், சிறுவனின் உடலில் சோடியம் நைட்ரேட்டின் தடயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகே போலீசார் இதைக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசாரணை: முதற்கட்டமாகச் சிறுவனின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விஜய் கூறிய கருத்துகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. போலீசார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தவே அவரே மகனைக் கொலை செய்ததைத் தனது மனைவியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கொலைக்கான காரணத்தை விசாரித்த போது தான் போலீசார் ஷாக் ஆகினர்.

பள்ளியில் இருந்து அவரது மகன் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளது. சக மாணவர்களை அடித்துத் துன்புறுத்துவதாகவும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று புகார்கள் வந்துள்ளன. இது மட்டுமின்றி, வீட்டில் அந்த சிறுவன் ஆபாசப் படங்களுக்கு அடிமையாக இருந்துள்ளான். இதனால் விரக்தியடைந்த விஜய் தனது மகனைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

கடந்த ஜனவரி 13ஆம் தேதி காலை விஜய் தனது மகனை பைக்கில் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே கூல் டிரிங்ஸில் சோடியம் நைட்ரேட் கலந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்தவுடன் அந்த சிறுவன் மயங்கிய நிலையில், விஜய் தனது மகனின் உயிரற்ற உடலை அருகே உள்ள வாய்க்காலில் வீசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+