பாஜக முதல்வர் பதவி பறிபோகிறது? மகாராஷ்டிராவில் ஆட்சி காலி? உச்சத்திற்கு போகும் அரசியல் குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் என்டிஏ கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த சிறிய விரிசல் இப்போது மிகப் பெரிய பிளவை நோக்கி செல்வது போலவே தெரிகிறது. அம்மாநில முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கும் சூழலில் அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை முதல்வர் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

மகாராஷ்டிராவில் இப்போது என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் சூழலில், கூட்டணியில் உள்ள ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்குப் பெரிதாக எந்தவொரு குழப்பமும் ஆட்சி நடந்து வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாகவே மகாராஷ்டிராவில் அரசியல் சூழல் மெல்ல மாறி வருவது போலத் தெரிகிறது.

Maharashtra BJP Shiv Sena

மோதல்

அங்கு ஆளும் என்டிஏ கூட்டணியில் இருக்கும் பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அடுத்த வாரம் அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தே போட்டியிடுகிறது. அதாவது மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தல்களில் இந்தக் கட்சிகள் தனித்தே போட்டியிடுகிறது.

இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிவசேனா பாஜக இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இரு தரப்புமே எதிர்த் தரப்பை விமர்சித்து கருத்துகளைக் கூறி வருகிறது. குறிப்பாக ஷிண்டே ஆதரவாளர்கள் மீண்டும் அவர் மாநில முதல்வராவார் என வெளிப்படையாகக் கூறி வருகின்றனர்.

ஷிண்டே - மீண்டும் முதல்வர்

2024ல் நடந்த மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனாவை விட பாஜக அதிக இடங்களில் வென்றது. இதனால் ஷிண்டே வேறு வழியில்லாமல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், ஷிண்டே துணை முதல்வரானார். இப்போது ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ஷிண்டே இழந்த முதலமைச்சர் பதவியை மீண்டும் பெற விரும்புவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று சிவசேனாவை சேர்ந்த மகாராஷ்டிர கல்வி அமைச்சர் தாதா பூசே சமீபத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கூட்டத்தில் பேசிய அவர், "முன்பு, மகாராஷ்டிரா இதுவரை ஷிண்டேவை போன்ற ஒரு முதலமைச்சரைக் கண்டதில்லை, எதிர்காலத்திலும் பார்க்க முடியாது. இதன் காரணமாகவே இப்போதும் மக்களிடம் போய் யார் முதல்வர் என்று கேட்டால் ஏக்நாத் ஷிண்டே தான் தங்கள் முதலமைச்சர் என்று கூறுவார்கள். எனவே, நிச்சயம் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் மகாராஷ்டிராவை வழிநடத்துவார்" என்றார்.

ஏன் முக்கியம்

தாதா பூசேவின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவரது இந்த நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏற்கனவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், பட்னாவிஸை மாற்ற வேண்டும் என்பது போல பூசே நேரடியாகவே பேசியிருக்கிறார். இதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது தெளிவாகவே தெரிகிறது.

பகீர் குற்றச்சாட்டு

மேலும், சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்.எல்.ஏ. நீலேஷ் ரானே, பாஜக மீது மற்றொரு பகீர் குற்றச்சாட்டையும் முன்வைத்தார். அதாவது பாஜக நிர்வாகி விஜய் கெனவடேகரின் வீட்டில் இருந்து ₹25 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக அவர் கூறி பரபரப்பைக் கிளப்பினார். இந்த பணத்தை பாஜக வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாகவும் அவர் சாடினார். அதாவது பாஜக தேர்தலில் முறைகேடு செய்வதாகக் கூட்டணிக் கட்சியான ஷிண்டே தரப்பே குற்றஞ்சாட்டியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+