Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா: 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வாக்குப் பதிவு- செல்வந்தர்களின் கொலாபாவில்தான் மிக மோசம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் மிக அதிக அளவாக 65.1% வாக்குகள் பதிவாகி உள்ளன. 1995-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முதல் முறையாக அதிகபட்சமாக 71.69% வாக்குகள் பதிவாகி இருந்தன. கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 61.13% வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் தொடக்கம் முதலே மந்தமான வாக்குப் பதிவுதான் இருந்து வந்தது.

maharashtra assembly election 2024 2024

இந்திய தேர்தல் ஆணையத்தின் இறுதிப் புள்ளி விவரப்படி மகாராஷ்டிராவில் மொத்தம் 65.1% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 1995-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் 71.69% வாக்குகள் பதிவாகின. கடந்த 30 ஆண்டுகளில் தற்போதைய தேர்தலில்தான் அதிகமான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

மகாராஷ்டிரா தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பதால் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிகளிடையே கடும் போட்டி இருக்கும் என்பதையே எக்ஸிட் போல் முடிவுகளும் உறுதிப்படுத்தி இருக்கின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் மகாயுதி கூட்டணி 42.71% வாக்குகளையும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி 43.91% வாக்குகளையும் பெற்றிருந்தன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது

2019-ம் ஆண்டு சட்டசபைத தேர்தலில் 8.85 கோடி பேர் வாக்களித்தனர். தற்போதைய தேர்தலில் 9.70 கோடி பேர் வாக்காளர்கள். கடந்த முறையை விட இம்முறை 3.5% பேர் கூடுதலாக வாக்களித்திருப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவின் நகர்ப்புறங்களான கொலாபா, மும்பை, தானே பகுதிகளில் வாக்குப் பதிவு மிகவும் குறைவுதான். கடந்த சட்டசபை தேர்தலில் மும்பை பிராந்தியத்தில் உள்ள 36 தொகுதிகளில் 50.67% வாக்குகளே பதிவாகின. இந்த முறை மொத்தமாக மும்பை பிராந்தியத்தின் 36 தொகுதிகளிலும் 53.92% வாக்குகள் பதிவாகின. மும்பை மாநகரத்தில் 52.07%; புறநகர்களில் 55.7% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

மும்பையின் கொலாபாவில்தான் முதன்மையான தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சட்டசபை வளாகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. ஆனால் கொலாபாவில்தான் மிக மோசமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கொலாபாவில் மாலை 5 மணி வரை வெறும் 41.6% வாக்குகளே பதிவாகின. 60% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. புனே நகரம் ஆறுதல் அளிக்கும் வகையில் 60.70% வாக்குகளைப் பெற்றது. தானே நகரில் 56.05% வாக்குகள் பதிவாகின.

மகாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் மிக அதிகமான வாக்குகள் பதிவாகி இருக்கின்றா. மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் 76.25% வாக்குகள் பதிவாகின. துணை முதல்வர் அஜித் பவாரும் அவரது உறவினரான யோகேந்திர பவாரும் மோதுகிற பாராமதி தொகுதியில் 71.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 68.82% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு பதிவு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறது; அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாக்குகளை பதிவு செய் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனாலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+