Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவருக்கு ஆதரவு தர முடியாது.. உத்தவ் தாக்கரேதான் முதல்வர்.. ஆதித்யாவை ஏமாற்றிய என்சிபி - காங்.!

சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தாலும், முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவிற்குத்தான் வழங்கப்படும், ஆதித்யா தாக்கரேவிற்கு வழங்கப்படாது என்று கூறி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவில் உதயமாகும் கூட்டணி ஆட்சி!| Shiv Sena, NCP, and Congress will form the new alliance

    மும்பை: சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் இன்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவிற்குத்தான் வழங்கப்படும், ஆதித்யா தாக்கரேவிற்கு வழங்கப்படாது என்று கூறி உள்ளனர்.

    மகாராஷ்ரா அரசியலில் அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறிவிட்டது. சிவசேனா ஆதரவு தர மறுத்ததால் பாஜக இந்த முடிவை எடுத்தது.

    இந்த நிலையில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இன்று அந்த கட்சி கூட்டணி உடன்படிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும்.

    ஆதித்யா எப்படி

    ஆதித்யா எப்படி

    மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜக இடையில் பிரச்சனை வந்ததற்கு காரணமே ஆதித்யா தாக்கரேதான் என்று கூட கூறலாம். அவர்தான் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறை தேர்தலில் நின்றார். அதில் எளிதாக வெற்றியும் பெற்றார். இவரின் ஆசைதான் பாஜக - சிவசேனா கூட்டணியை உடைத்தது.

    பதவி கேட்டார்

    பதவி கேட்டார்

    இதனால் அவர் தனக்கு முதல்வர் பதவி வேண்டும். இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். இதனால்தான் சிவசேனா மற்றும் பாஜக இடையில் கடுமையான பிரச்சனைகள் உருவானது. கூட்டணியும் முறிந்தது.

    ஆட்சி அமைகிறது

    ஆட்சி அமைகிறது

    தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை சிவசேனா எம்எல்ஏக்கள் இதற்கான கடிதத்தை ஆளுனரிடம் அளிக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் முழுமையாக கொடுக்காது. சிவசேனா இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்யும்.

    யார் முதல்வர்

    யார் முதல்வர்

    ஆனால் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே முதல்வர் ஆக போவது இல்லை. உத்தவ் தாக்கரேதான் முதல்வர் பதவியை ஏற்க போகிறார் என்கிறார்கள். ஆதித்யாவிற்கு ஏதாவது பெரிய அமைச்சரவை பொறுப்பை அளிக்கலாம் என்று சிவசேனா முடிவு செய்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இப்போது எம்எல்ஏ இல்லை.

    எப்போது

    எப்போது

    இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்று, பின் 6 மாதத்தில் எங்காவது ஒரு தொகுதியில் நின்று விரைவில் எம்எல்ஏ ஆவார் என்று கூறப்படுகிறது. ஆதித்யா தாக்கரே முதல்வராக தேசியவாத காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மிகவும் இளையவர். சரத் பவார் போன்ற பெரிய நபர்கள் அவருக்காக இறங்கி வர முடியாது என்று கோரியுள்ளனர் .

    என்ன சமாதானம்

    என்ன சமாதானம்

    உத்தவ் தாக்கரே என்றால் ஓகே. அவருக்கு அனுபவம் இருக்கிறது.அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறி உள்ளனர். இதனால் சிவசேனா ஆதித்யா தாக்கரேவை சமாதானம் செய்துள்ளது என்று கூறுகிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+