மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் கடைசிகட்ட பரபர.. ரிசார்ட்டில் சிவசேனா எம்எல்ஏக்கள்.. விரைவில் முதல்வர் பதவி ஏற்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் உதயமாகும் கூட்டணி ஆட்சி!| Shiv Sena, NCP, and Congress will form the new alliance

    மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் எல்லோரும் அக்கட்சி சார்பாக தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைவது ஏறத்தாழ உறுதுதியாகிவிட்டது. அங்கு சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்த்து கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    இதனால் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. மும்பையில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை செய்தனர்.

    என்சிபி, காங்., சிவசேனா கூட்டணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்குஎன்சிபி, காங்., சிவசேனா கூட்டணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திடீர் வழக்கு

    என்ன முடிவு

    என்ன முடிவு

    ஆலோசனையின் முடிவில் சிவசேனா கட்சிக்கு முதல்வர் பதவியை கொடுக்க தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர். ஐந்து வருடமும் சிவசேனா கட்சிதான் முதல்வர் பதவியில் இருக்கும். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி துணை முதல்வர் பதவியில் இருக்கும்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இதனால் இன்னும் இரண்டு நாட்களில் சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரி பின் பெரும்பான்மையை நிரூபிக்கும். இதற்காக ஆளுநரை இன்று இரவு அல்லது நாளை காலை சிவசேனா எம்எல்ஏக்கள் சந்திக்க இருக்கிறார்கள். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு கையெழுத்து இதில் இடம்பெற்று இருக்கும்.

    எப்படி

    எப்படி

    இதனால் தற்போது சிவசேனா எம்எல்ஏக்கள் எல்லோரும் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதனால் எல்லோரும் தனியார் ஹோட்டலில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மூலம் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இரண்டு நாட்களுக்கு முன் சிவசேனா எம்எல்ஏக்கள் 17 பேர் பாஜகவிற்கு தாவ போகிறார்கள். அமித் ஷாவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதை சிவசேனா கட்சி மறுத்தது. ஆனால் பாதுகாப்பிற்காக தற்போது சிவசேனா எம்எல்ஏக்கள் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Maharashtra: Shiv Sena MLA's are staying in the resort as the alliance with NCP and Congress formed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X