Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தவ்வின் தலைமையின் கீழ் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும்.. அஜித் பவார் அதிரடி டிவிட்!

மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் தலைமையின் கீழ் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிராவின் 18-வது முதல்வராக பதவியேற்றார் உத்தவ் தாக்கரே!

    மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் தலைமையின் கீழ் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    கடைசியில் மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. நேற்று முதல்நாள் அங்கு பாஜகவிற்கு அளித்த வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.

    Maharashtra: Under Uddhav leadership, the State will develop as a whole tweets Ajit Pawar

    இதனால் அங்கு அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவரது தலைமையில் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

    அஜித் பவார் பாஜகவுடன் கூட்டு வைத்ததால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் அவரது உறவில் கொஞ்சம் கசப்பு ஏற்பட்டது. ஆனால் 3 நாட்களில் அஜித் பவார் என்சிபி பக்கம் வந்துவிட்டார். தற்போது இவர்கள் உறவில் சுமூக தீர்வு ஏற்பட்டு உள்ளது. இன்று உத்தவ் பதவி ஏற்பு விழா மேடையில் இவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+