சண்டை செய்வோம்.. பாஜக அரசு கொண்டு வரட்டும்! ஒரே நாடு ஒரே தேர்தல் கேள்விக்கு கார்கே மாஸ் பதில்
மும்பை: மத்திய பாஜக அரசு திடீரென கூட்டும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒரே வரியில் பதிலளித்து இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேலைகளை அளும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தற்போதே தொடங்கிவிட்டன. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளன. பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ளன.

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் 'இந்தியா' என்ற கூட்டணியை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஜேடியு, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ஆர்ஜேடி, என்சிபி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாடி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரே அணியாக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.
இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. 2 வது கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெற்றது. அதில் கூட்டத்தில் இந்தியா என கூட்டணிக்கு பெயரிடப்பட்டது. இந்த நிலையில் இன்று மூன்றாவது கூட்டம் மும்பையில் கூடியுள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய பாஜக அரசு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்க இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ள இந்த கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 63 பேர் கலந்துகொண்டு இருக்கிறார்கள். கூட்டணிக்கான லோகோ மற்றும் ஒருங்கிணைப்பாளர் குறித்து இதில் ஆலோசிக்கப்படுவதுடன், 2024 லோக் சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, திமுக சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுக எம்பி டி ஆர் பாலு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன் ராகுல் காந்தியுடன் அரங்கத்திற்கு உள்ளே சென்ற மல்லிகார்ஜுன கார்கேவிடம், செய்தியாளர்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வரப்போவதாக வெளியான தகவல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "அவர்கள் கொண்டு வரட்டும்; நாங்கள் தொடர்ந்து சண்டையிடுவோம்." என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications