ஆபாச படத்தை பார்த்து..உடலை கயிற்றால் கட்டி விபரீத உடலுறவு...கழுத்தில் கயிறு இறுக்கி வாலிபர் சாவு!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆபாச படத்தை பார்த்து, உடலை கயிற்றால் கட்டி பெண்ணுடன் விபரீத உடலுறவு மேற்கொண்ட வாலிபர் கழுத்தில் கயிறு இறுக்கி உயிரிழந்தார்.
வாலிபர் இறந்தது தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இது தேவையா?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கபர்கேரா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் வியாழக்கிழமை இரவு 28 வயது வாலிபரும், ஒரு பெண்ணும் அறை எடுத்து தங்கினர். பின்னர் இருவரும் உடலுறவு மேற்கொண்டனர். அப்போது காமம் தலைக்கேறிய நிலையில் உற்சாகத்தை மேலும் அதிகரிப்பதற்காக அந்தப் பெண், வாலிபரின் கைகளையும், கால்களையும் ஒரு நைலான் கயிற்றால் நாற்காலியுடன் சேர்த்து கட்டினார். மேலும் அவரது கழுத்தில் மற்றொரு கயிற்றையும் கட்டி நாற்காலியுடன் சேர்த்து கட்டியுள்ளார்.

உயிரை பறித்தது
ஒரு கட்டத்தில் அந்த பெண் கழிவறைக்கு சென்றபோது, நாற்காலி விலகியதால் வாலிபரின் கழுத்தில் கட்டப்பட்ட கயிறு இறுக்கிக் கொண்டது. ஏற்கனவே கை, கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் நகர முடியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கழிவறையில் இருந்து வெளியே வந்த பெண் , வாலிபர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை
இதுபற்றி அவர் லாட்ஜ் ஊழியரிடம் தகவல் தெரிவித்தார். லாட்ஜ் ஊழியர் வந்து நாற்காலியில் கட்டப்பட்ட நபரை கயிற்றில் இருந்து விடுவித்தார். இது பற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சென்று வாலிபரின் உடலை மீட்டு, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

ஆபாச படத்தால் வந்த வினை
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-இறந்தவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருவரும் ஒன்றாக நேரம் செலவிட வியாழக்கிழமை இரவு லாட்ஜுக்கு வந்தனர். அதன்பின்பு ஆபாச பட காட்சிகளை பார்த்து இந்த விபரீத உடலுறவில் ஈடுபட்டனர். கடைசியில் அது உயிரை பறித்து விட்டது. இதுபோல் ஆபாச படங்களை பார்த்து விட்டு அதுபோல் யாரும் இதுபோன்ற விபரீதமான செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறினார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications