மும்பையில் 17 குழந்தைகளை பிணையாக பிடித்து வைத்த மர்ம நபர்! போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
மும்பை: மும்பையில் 17 குழந்தைகளை பிடித்து வைத்திருந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போது தற்காப்புக்காக அவரை சுட்ட போது அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் மும்பையின் போவாய் என்ற பகுதியில் Ra Studios என்ற ஒன்று உள்ளது. இங்கு 10 முதல் 12 வயது கொண்ட 17 குழந்தைகளுக்கு விளம்பர ஆடிஷனுக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்த நிலையில் உள்ளே ஆட்டிஷனுக்கு அனுப்பிவிட்டு வெளியே காத்திருந்தனர். குழந்தைகள் வந்ததும் அந்த நபர் உடனடியாக தாழிட்டுக் கொண்டார்.
இதனால் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்த கட்டடத்திற்கு போன் போட்டு பேசினர்.
அப்போது அந்த நபர் ஒரு வீடியோவை போலீஸுக்கு அனுப்பினாராம். அதில் "என் பெயர் ரோஹித் ஆர்யா. நான் சில நபர்களிடம் பேச வேண்டும். அதற்கு போலீஸார் ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஸ்டூடியோவை தீ வைத்து எரித்துவிடுவேன்" என மிரட்டினாராம்.
இதையடுத்து போலீஸாரின் ஒரு பகுதியினர் அந்த கட்டடத்தின் பின்பக்க அறையின் கிரில்லை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் குழந்தைகளை விட்டுவிட்டு தங்களிடம் சரணடையுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால் அவரோ தனது கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே குழந்தைகளை விடுவேன் என்றாராம்.
இதையடுத்து போலீஸார் அந்த நபரின் கவனத்தை திசைத் திருப்பி அவரிடம் இருந்து குழந்தைகளை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவரை பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த ஏர் கன்னால் போலீஸார் நோக்கி சுட்டதாக தெரிகிறது. இதனால் பாதுகாப்பு கருதி போலீஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரோஹித் ஆர்யாவுக்கு காயம் ஏற்பட்டது.
அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அந்த நபர் யாரென தெரியவில்லை. அவர் குறித்து தகவல்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். மும்பையில் 100 குழந்தைகளை விளம்பர ஆடிஷனுக்கு அழைத்த நிலையில் 17 குழந்தைகள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications