பெண்ணிடம் வழிந்த தொழிலதிபர்.. 52 வயதில் வந்த திருமண ஆசையால் நடந்த விபரீதம்.. ரூ.53 லட்சம் போச்சே
மும்பை: மும்பையை சேர்ந்த 52 வயது தொழிலதிபர் தனது விபரீத ஆசையால் ரூ.53 லட்சத்தை பறிகொடுத்துள்ளார். டேட்டிங் செயலியில் பெண் எனக்கூறி பழக்கமான பெண் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் திருமண ஆசையில் அந்த பெண் சொன்னதை கேட்டு ரூ.53 லட்சம் அனுப்பி பணத்தை இழந்துள்ளார். இந்த மோசடி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு:
மும்பையை சேர்ந்தவர் 52 வயது தொழிலதிபர். இவர் லாஜிஸ்டிக் தொழில் மற்றும் மார்க்கெட்டிங் கம்பெனியை நடத்தி வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். மனைவி இல்லை. இதனால் டேட்டிங் செயலி பயன்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி டேட்டிங் செயலியில் பழக்கமாகும் பெண் பிடித்தால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

இந்நிலையில் தான் ‛டேட்டிங்' செயலியின் வழியாக இருவருக்கும் பிரியங்கா குப்தா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பிரியங்கா குப்தா ஜூகு பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்து இருந்தார். இருவரும் டேட்டிங் செயலியில் செல்போன் எண்ணை பரிமாறி கொண்டு வாட்ஸ்அப்பில் பேச தொடங்கினர்.
அப்போது பிரியங்கா குப்தா, ‛‛எனக்கும், எனது கணவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது. நான் இப்போது எனது 6 வயது மகளுடன் தான் வசித்து வருகிறேன்'' என்று கூறினார். இதையடுத்து தொழிலதிபர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். இதற்கிடையே தான் அந்த பிரியங்கா குப்தா தனது மறுமணம் குறித்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர், ‛‛நான் விரைவில் 2வது திருமணம் செய்ய உள்ளேன். என்னை பொறுத்தவரை தொழில் செய்யும் நபரை தான் திருமணம் செய்ய உள்ளேன். மாத சம்பளம் வழங்கும் நபரை திருமணம் செய்யப்போவது இல்லை'' என்று கூறியுள்ளார். இதில் தொழிலதிபர் சிக்கினார். அப்போது அவர், ‛‛நானும் தொழிலதிபர் தான். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?'' என கேட்டார்.
அதற்கு அந்த பிரியங்கா குப்தா ‛ஓகே' சொன்னார். அதோடு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனால் தொழிலதிபர் மகிழ்ச்சியில் திளைத்தார். தொடர்ந்து இருவரும் வாட்ஸ்அப்பில் பேசி கொண்டிருந்தனர். அப்போது அக்டோபர் 13 ம் தேதி பிரியங்கா குப்தா, ‛‛நான் ‛கோல்ட் டிரேடிங்' தொழில் செய்து வருகிறேன். கம்பெனியின் பெயர் ‛மார்க்கெட் அக்சஸ்'. இதில் முதலீடு செய்தால் சிறிது காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்'' என்று கூறினார்.
காதல் மற்றும் திருமண மயக்கத்தில் இருந்த 52 வயது தொழிலதிபர் கொஞ்சம் தயங்கினார். ஆனால் பிரியங்கா குப்தா விடவில்லை. அந்த நிறுவனத்தில் அவருக்கு என்று தனியாக அக்கவுண்ட்டை திறந்து கொடுத்து ரூ.53.30 லட்சத்தை முதலீடு செய்ய வைத்தார். அந்த அக்கவுண்ட்டில் அவருக்கான முதிர்வு தொகை ரூ.1.08 கோடியாக காண்பித்தது. இதனால் ஹேப்பியான தொழிலதிபர் பணத்தை எடுக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
பிரியங்கா குப்தாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரால் முடியவில்லை. அப்போது தான் மோசடியில் சிக்கி பணத்தை இழந்ததை தொழிலதிபர் உணர்ந்தார். இதுபற்றி தொழிலதிபர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications