மும்பை சர்ச் கேட் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! அலறியடித்து ஓடிய பயணிகள்.. ஷாக் வீடியோ
மும்பை: மும்பை புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் ஒன்றான சர்ச்கேட் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் ஏற்பட்ட தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல காட்சியளித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர். தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது சர்ச்கேட் ரயில் நிலையம். மும்பை புறநகர் மின்சார ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் இன்று மாலை 5.26 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மும்பை தீ அணைப்பு படை போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Fire at Churchgate #Mumbai #localtrains pic.twitter.com/iLBdC0Tj6H
— Kaiwant (@KAIWANT) June 5, 2025
தீ விபத்தி ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. தீ விபத்து காரணமாக ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகள் கரும்புகை மண்டலம் போல காட்சியளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications